islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

வணிகத்துக்கு டாலரைக் கைவிடுகிறது பிரிக் நாடுகள் - அமெரிக்காவுக்கு அடி?


இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான "பிரிக்" நாடுகள் கூட்டமைப்பு, தங்களுக்குள் நடக்கும் வர்த்தக சம்பந்தமான பரிவர்த்தனைகளில், தங்கள் நாடுகளின் கரன்சியையே இனிமேல் பயன்படுத்திக் கொள்ளும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

சீனாவிலுள்ள சான்யா நகரில் இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டமைப்பான பிரிக் கூட்டமைப்பின் மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றுள்ளார்.

இம்மாநாட்டில் இந்த ஐந்து நாடுகளுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்திக் கொள்வதோடு, இவை எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் பரஸ்பர உதவிகள் செய்வதில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், லிபியாவில் நடக்கும் தாக்குதலுக்கு இந்த மாநாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "லிபியா விஷயத்தில் அனைத்து தரப்பினரும் பேசி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். மற்ற நாடுகளின் எல்லைப்புற கவுரவத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்" என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஐந்து நாடுகளிடையே நடக்கும் பொருளாதாரப் பரிவர்த்தனைகளில், நிதி சம்பந்தப்பட்ட பரிமாற்றங்களில், காபிடல் மார்க்கெட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவரவர் நாட்டு கரன்சியையே பயன்படுத்த அனுமதிக்கும் நடைமுறைகளை உருவாக்க இந்நாடுகளிடையே உடன்பாடு ஏற்பட்டது.

"இந்த நாடுகளிடம் அதிக வளங்கள், மனித சக்தி திறன் இருப்பதால், அமெரிக்க டாலர் அல்லது மற்ற கரன்சியை அடிப்படையாகக் கொள்ளாமல் பரஸ்பரம் அந்தந்த நாட்டு கரன்சியைத் தங்களிடையிலான வர்த்தகப் புழக்கத்தில் ஈடுபடுத்துவது" என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்நாடுகளின் வங்கித் துறை பிரதிநிதிகள் முதற்கட்ட ஆவணங்களில் கையெழுத்திட்டனர். இதை, ஐந்து நாட்டுத் தலைவர்களும் கொள்கையளவில் ஏற்று கொண்டதாகவும் அறிவித்தனர்.

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் ஐநாவில் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும் இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்கா தற்காலிக உறுப்பு நாடுகளாகவும் உள்ளன. இந்நிலையில், மற்றொரு நிரந்த உறுப்பு நாடான அமெரிக்காவின் கரன்ஸியையே வணிக பரிவர்த்தனைகளுக்கு இதுவரை உபயோகப்படுத்தி வந்துள்ளதை மாற்றும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்புதிய தீர்மானம், அமெரிக்க பொருளாதாரத்தில் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
inneram

No comments:

Post a Comment