islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை உயர வேண்டும்: கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்


இந்தியாவில், உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை உயர வேண்டும் என்று கோவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை நடைபெற்ற மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது: உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை உலக அளவில் 23 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் 11 சதவீதம் மாணவ, மாணவியர் மட்டுமே உயர்கல்வி பயில்கின்றனர்.

இந்நிலை மாற வேண்டும். உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை உயர வேண்டும். இதற்காக 2012-ல் தொடங்கும் 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.ஜி.பாரத்குமார் தலைமை வகித்தார். மேலாண்மை இயக்குநர்கள் பா.மகேந்திரன், பா.மகா அஜய்பிரசாத், இயக்குநர் எம்.என்.பண்டோபாத்தியாயா, முதன்மையர் ரஜீவா, கல்லூரி முதல்வர் ஆர்.சாம்சன் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், 2006 முதல் 2010 வரை பயின்ற 793 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
dinamani

No comments:

Post a Comment