islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மலேகான் குண்டுவெடிப்பு:விசாரணையை திசை திருப்ப ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முஸ்லிம் வேடமிட்டனர்

                                             
மலேகான் குண்டுவெடிப்பு:விசாரணையை திசை திருப்ப ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முஸ்லிம் வேடமிட்டனர்


மும்பை:2006-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பை முஸ்லிம் வேடத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நந்தித் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து முஸ்லிம்கள் அணியும் ஆடையும், தொப்பியும், போலி தாடியும் கண்டுபிடிக்கப்பட்டன.

குண்டுவெடிப்பின் பின்னணியில் முஸ்லிம்கள் செயல்பட்டுள்ளார்கள் என நம்பவைப்பதற்கான ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் திட்டம் என்பது தெளிவானது. மலேகான் குண்டுவெடிப்பிற்கு பிறகு இறந்த உடல்களை அகற்றும் வேளையில் போலியான தாடி அணிந்த ஒரு இறந்த உடலை கண்டது குறித்து மில்லி கெஸட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. உடனடியாகவே இந்த உடலை போலீஸ் நாஸிக்கிற்கு அனுப்பியது. ஆனால், மறுநாள் அப்படியொரு சம்பவம் நிகழவில்லை என செய்தி வெளியானது.

2006 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ் என்ற உருது பத்திரிகையும், செப்டம்பர் 11-ஆம் தேதி மும்பையிலிருந்து வெளியாகும் இன்குலாப் என்ற பத்திரிகையும் இதே செய்தியை வெளியிட்டிருந்ததாக என மில்லிகெஸட் மேற்கோள்காட்டியது.

நந்தித், மலேகான் குண்டுவெடிப்புகளுக்கு இடையே ஏராளமான ஒற்றுமைகளை புலனாய்வு ஏஜன்சிகள் கண்டுபிடித்த போதிலும் இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்ய அவர்களால் இயலவில்லை. அதேவேளையில், இவ்வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அஸிமானந்தா முஸ்லிம்களுக்கு எதிராக பகை உணர்வை வளர்த்துவதில் தான் பங்கு வகித்ததாக புலனாய்வு ஏஜன்சியிடம் தெரிவித்திருந்தார்.

நந்தித் குண்டுவெடிப்பில் குற்றவாளியான மனோகர் ராவு முஸ்லிம் வேடமணிந்து தொப்பியும், தாடியும் வைத்ததாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். குண்டுவெடிப்பின் குற்றத்தை முஸ்லிம்களின் மீது சாட்டவும், புலனாய்வு அதிகாரிகளை திசை திருப்பவும் இவ்வாறு முஸ்லிம் வேடமிட்டதாக மனோஹர் ராவு கூறியிருந்தான். இதற்காக முஸ்லிம் பெயர்களில் போலி இ-மெயில் முகவரிகளை உருவாக்கியுள்ளனர்.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சூழல் விபர அறிக்கையை சமர்ப்பிக்க தேசிய புலனாய்வு ஏஜன்சி முயன்ற போதிலும் அது அவ்வளவு எளிதானது அல்ல என கருதப்படுகிறது.

ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை !

                         
குளோபல் மீடியா அறிக்கையின் படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து உலக முழுவதும் 60 லட்சம் ஃபேஸ் புக் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.சமூக வலைதளமாக உலக முழுவதும் பிரபலமடைந்துள்ளது ஃபேஸ் புக். கோடிக்கணக்கானோர் இதில் தங்களுக்கு என தனித்தனி அக்கவுண்டுகளை வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை
இரவு யாரோ சில விஷமிகள் இந்த வலைதளத்திற்குள்
நுழைந்து 60 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களின் கணக்குகளில் புகுந்து பாலியல் மற்றும் வன்முறை தொடர்பான புகைப்படங்களை இணைத்துள்ளனர். பெங்களூர் நகரத்தில் மட்டும்2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ் புக் பயனீட்டாளர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரில் சைபர் க்ரைம் துறைக்கு இதுக்குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. சில புகார்கள் தொடர்பாக இத்துறை விசாரணையை துவக்கியுள்ளது.

நேற்று காலை பெங்களூர் கோரமங்கலா பகுதியை சார்ந்த காமினி வர்மா என்பவர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது ஃபேஸ் புக் கணக்கை லாக் செய்துள்ளார். அவருக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய ஃபோட்டோவில் உள்ள முகத்தை மார்ஃபிங் முறையில் நிர்வாண நடிகையின் உடலில் ஒட்டிய புகைப்படம் காமினியின் ஸ்டேடஸ் செய்தியில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அவரது தாயார், சகோதரர் மற்றும் 19 நண்பர்கள் காமினியை திட்டி மெஸேஜ் அனுப்பியுள்ளனர். இதனை கண்ணுற்று அதிர்ச்சியடைந்த அவர் நேரடியாக போலீஸுக்கு ஃபோன் செய்துள்ளார். 




அவர்கள் சைபர் க்ரைமில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். முந்தைய தினம் காமினியின் ஃபேஸ் புக் அக்கவுண்டின் அவரது நண்பரிடமிருந்து செய்தி அறிக்கை வந்துள்ளது. இது ஒரு பிரபல பத்திரிகையில் வெளியான செய்தி என குறிப்பிடப்பட்டிருந்தது. ’party till the wee hours’ என்ற செய்தி தலைப்பை படித்துவிட்டு அவர் அந்த ஆர்வத்துடன் அந்த லிங்கை க்ளிக் செய்துள்ளார். மறுநாள் அவருடைய கணக்கில் எல்லாமே மாற்றப்பட்டுள்ளது.

முன்பு ஓர்குட் என்ற வலைதளமும் இவ்வாறுதான் வீழ்ச்சியை சந்தித்தது. ஃபேஸ்புக்கு அதே போன்ற தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஃபேஸ்புக் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் அதற்கும் ஓர்குட்டின் கதிதான் ஏற்படும் என பிரபல மீடியா நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

ஆகவே தேவையற்ற லிங்குகள் உங்கள் ஃபேஸ்புக்கில் தென்பட்டாலோ அல்லது பாலியல் தொடர்பான ஸ்பேம் செய்திகள் உங்கள் வாலில்(wall) கண்டால் அதனை ஆர்வக் கோளாரில் க்ளிக் செய்துவிடாதீர்கள்.