1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நள்ளிரவில் புரூலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது விமானத்திலிருந்து ஆயுதங்கள் கொட்டப்பட்டன. நூற்றுக் கணக்கான ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், பல லட்சம் தோட்டாக்களும் இதில் இருந்தன. லாத்வியா நாட்டைச் சேர்ந்த விமானத்திலிருந்து இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக தெரிய வந்தது.
islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
புரூலியா:மத்திய அரசு மூடி மறைத்த 14 ஆண்டு ரகசியம் வெளியானது
1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நள்ளிரவில் புரூலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் மீது விமானத்திலிருந்து ஆயுதங்கள் கொட்டப்பட்டன. நூற்றுக் கணக்கான ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், பல லட்சம் தோட்டாக்களும் இதில் இருந்தன. லாத்வியா நாட்டைச் சேர்ந்த விமானத்திலிருந்து இந்த ஆயுதங்கள் கொட்டப்பட்டதாக தெரிய வந்தது.
ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
சம்ஸ்கிருதம் பேசினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றது மனுஸ்மிருதி. இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள்.
ஏழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி கருதுவதாக வந்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.
மோசமான சூறாவளியால் உருக்குலைந்து போன அலபாமா நகரம்
அமெரிக்காவில் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கடுமையான சூறாவளி புயல் வீசி வருகிறது.
இதனால் அலபாமா, அர்கன்காஸ், கென்டுகி, மிசிசிப்பி, மிசோரி, டென்னிசீ, டெக்காஸ் உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடும் காற்று சுழன்று வீசுவதால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.
கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?
இந்த ஊழல் விசாரணைகள் மூலம் அரசு புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது தான் அவர்கள் முன் இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை.
ஊழலை ஒழித்துக் கட்டிவிட்டு தான் மறுவேலை என்று இந்தியாவின் நீதித் துறையும் மத்திய புலனாய்வுத் துறையும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருப்பது போல ஆங்கில செய்தி ஊடகங்களில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் சீசனில் சிறப்பாகக் கல்லா கட்டி முடித்த பின், இப்போது செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் நடந்து கொண்டிருப்பது நியாயத் தீர்ப்பு சீசன்.
நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது?
“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின் மிச்சங்களைத் தட்டிவிட்டு முதல் பக்கத்தைப் புரட்டினேன் – அஸன் ஜாஃப்ரி என்கிற பெயர் அழகான முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அன்றைக்கு நாண் அணிந்திருந்த காலணிகளை அதற்குப் பின் நான் பயன்படுத்தவும் இல்லை – அதன் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும் இல்லை”
சாய்பாபா: “சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?”
தண்ணி டேங்கு100 கோடி, மருத்தவமனைக்கு 100கோடி, கிருஷ்ணா நதிக்கு 100 கோடின்னு தாராளமா கணக்குபோட்டாலும் ஆயிரம் கோடியைத் தாண்டவில்லை, மிச்சம் 99,000 கோடி எங்கே?
சாய்பாபா செத்துவிட்டார். அவரது பக்தர்களுக்கோ, ‘கடவுள் இறந்துவிட்டார்’! கடவுளின் மரணம் நிச்சயம் ஒரு வருந்தத்தக்க இரங்கல் செய்திதான். ஆனால் நமக்கோ கடவுளை விடவும், பக்தர்களைப் பற்றியே அதிக கவலை!
2ஜி: கனிமொழி மீது குற்றப்பத்திரிகை
இரண்டாம் தலைமுறை செல்லிட தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை திங்களன்று தாக்கல் செய்துள்ள முதலாவது கூடுதல் குற்றப்பத்திரிகையில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி மற்றும் வேறு நான்கு பேரின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
நரேந்திர மோடி வீட்டுக்கு சஞ்ஜீவ் பட் சென்றார்: டிரைவர்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட், 2000ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி நரேந்திர மோடியின் இல்லத்தில் நடைபெற்ற போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார் என்று அவரது கார் டிரைவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)