islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

லிபியாவில் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள்


லிபியாவில் பெண்களை ராணுவ வீரர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை அடக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள் பிடியில் மிஸ்ரட்டா, அஷ்தாபியா, ரூஸ்-லனாப் உள்ளிட்ட நகரங்கள் இருந்தன. தற்போது அவை மீண்டும் ராணுவத்தின் பிடியில் சிக்கி உள்ளன. இருந்தும் அவற்றை மீட்கும் நடவடிக்கையில் கிளர்ச்சியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே அங்கு தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதனால் அங்கு ராணுவம் முகாமிட்டுள்ளது. அங்கு முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களை கடத்தி சென்று தங்கள் முகாம்களில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் மனைவிமார்களையும் துன்புறுத்துகின்றனர்.

இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் தான் கிளர்ச்சியாளர்கள் பயந்து அடங்குவார்கள். அவர்களின் போராட்டம் கட்டுக்குள் வரும் என நினைக்கின்றனர். அதற்காக தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

No comments:

Post a Comment