islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
அதிகரிக்கும் பிரச்னைகள்!
மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தகவல்கள் சில மகிழ்ச்சிகளையும் சில கவலைகளையும் ஒன்றாக முன்வைத்துள்ளன. மகிழ்ச்சி கொள்வதற்கான காரணம், மக்கள் தொகைப் பெருக்கத்தின் வேகம் குறைந்துள்ளது. எழுதப்படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. கவலையடைவதற்கான காரணம், ஆறு வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
april fool -ஏப்ரல் ஃபுல்: ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!
ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சிலர் சிலரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.
கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?
தமிழகத்தில் இது தேர்தல் காலம். யாருக்கு ஓட்டுப் போடுவது; யாரை வீட்டுக்கு அனுப்பித் ‘தண்டிப்பது’ குறித்தெல்லாம் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். மாறி மாறி வரும் ஆட்சியாளர்களிடையே அவர்கள் கட்சிக் கொடியில் காணப்படும் வண்ணங்களைத் தாண்டி வேறெந்த வித்தியாசத்தையும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள் – அவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுமாறு உங்களிடம் கேட்டால் உங்களால் மௌனத்தைத் தவிற வேறு பதில் எதையும் சொல்லிவிடவும் முடியாது தானே. ஆனாலும் நீங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் கட்சி இனி ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆளப் போவதாகவும், கொள்கை முடிவுகள் பலவற்றை எடுக்கப் போகிறது என்றும் நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள் தானே? நமது பிரச்சினைகளும் நல்வாழ்வும் இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சி உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பது உங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறதல்லவா?
லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!
நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு ‘மனிதாபமானத்தின்’ அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன.
கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்!
தேர்தல் காலத்தில் கிரிக்கெட்டையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இந்து மதத்தை விட பெரிய மதம் கிரிக்கெட். ஆனாலும் ஐந்து, பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த கிரிக்கெட் பரபரப்பு இப்போது குறைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை போட்டி, கோப்பை என்று மக்களுக்கு சலித்துப் போகுமளவு ஏராளமான ஆட்டங்கள். 20 ட்வெண்டி வந்ததும் அதன் பரிமாணம் நிறையவே மாறியிருக்கிறது. இரசிகனை பொறுத்த வரை முன்னர் போல நுணுக்கங்களை அணுஅணுவாய் இரசிக்கும் தேவை இப்போது இருப்பதில்லை. ஆறு, நாலு என பரபரவென்று அவன் கூச்சலிடுகிறான்.
TNTJ -திமுகவை ஆதரிக்க என்ன காரணம் ?
அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா அவர்கள் தான் இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டார்களே! பின்பு ஏன் இவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலுமே எழும். எழவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)