சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்ரொக்கோமில் இறந்த பின்னரும் அப்புறப்படுத்தப் படாமல் வயோதிபர் ஒருவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவருக்கு 82 வயது என்று சுவீடிஸ் மாலை நேர பத்திரிகை தெரிவிக்கின்றது. இப்பகுதியில் உள்ள சகல வீடுகளுக்கும் புறோட்பான்ட் இணைப்பை மேற்கொண்ட இரண்டு ஊழியர்கள் வீட்டைத் திறந்தபோதே இவ் உடலத்தை கண்டுள்ளனர். இறந்தவருடைய குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்கள் 2007 ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளன. 2008 ம் ஆண்டில் இருந்து வந்த கடிதங்கள் உடைக்கப்படாமல் மலைபோல குவிந்து கிடக்கின்றன. போலீசார் இது குறித்து தகவல் தருகையில் இந்த முதியவர் இறந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டதாக தெரிவிக்கிறார்கள். இவருடைய ஓய்வூதியப் பணம் மாதாமாதம் வங்கியில் விழுந்துள்ளது. வீட்டு வாடகை உட்பட அனைத்தும் வங்கி மூலமாக கழிபட்டுக்கொண்டே இருந்துள்ளது. உறவுகள் சிதறி, பரபரப்பு வாழ்வு வாழும் ஐரோப்பாவில் முதியவர்களின் அவல வாழ்விற்கு இது ஓர் உதாரணமாக உள்ளது.
alaikal
No comments:
Post a Comment