தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சேலம் மாவட்ட நிர்வாகிகளின் முதல் ஆலோசனை கூட்டம் 30-09-2011 வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்குப்பிறகு கோட்டை பார்க் தெரு மர்கஸில் மாவட்டத்தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வரும் காலங்களில் தஃவா பணியை மாவட்டத்தில் வீரியமாக செயல் படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு, கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. கிளைகளில் இருந்த நிர்வாகிகள், 25-9-11 அன்று நடைபெற்ற மாவட்ட நிவாகிகள் தேர்வின் போது மாவட்ட பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு விட்டதால், விரைவில் அனைத்து கிளைகளுக்கும் விடுபட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வது, அல்லது முழுமையாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
2. வருகின்ற 9-10-11 ஞாயிறு அன்று மாவட்ட செயற்குழு நடத்துவது எனவும், அக்கூட்டத்தில் அனைத்து கிளைகளிலும் உறுப்பினர் சேர்க்கையை விரைவாக அதிகப்படுத்தவும், அதன் பிறகு கிளை நிர்வாகிகளின் தேர்வை வைத்துக்கொள்வது எனவும் தீர்மாணிக்கப்பட்டது.
3. கடந்த காலங்களில் மாவட்ட நிர்வாகமே, தெருமுனை பிரச்சாரம், பெண்கள் பயான் உள்பட அனைத்து பணிகளையும் கவனித்துக்கொண்டதால்தான் மாவட்டத்தில் தஃவா பணிகளில் தொய்வு ஏற்பட்டது, இனி கிளைகள்தான் அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் அதற்கு மாவட்டம் அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்கவேண்டும் என அறிவுறுத்தியதின் பேரில், மாநில அறிவுரையை ஏற்று இனி வரும் காலங்களில் அனைத்துக்கிளைகளிலும் பணிகளை தீவிரப்படுத்தி அதற்கு தேவையான உதவிகள் அனைத்தும் மாவட்டம் செய்து தரும் என்றும் தீர்மாணிக்கப்பட்டது.