islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
ஊடகங்களின் திடீர் ஊழல் எதிர்ப்பு: ஒரு நேர்த்தியான விளம்பரத்தைப் போல…
கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு தேசிய அளவிலான முதலாளித்துவ செய்தி ஊடகங்கள் ‘தேச பக்தியின்’ அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டன. டைம்ஸ் நௌ, என்.டி.டீ.வி, சி.என்.என் ஐ.பி.என் உள்ளிட்ட ஆங்கில செய்திச் சேனல்களில் பளீர் மேக்கப்பில் தோன்றும் செய்தியறிவிப்பாளர்களும் விருந்தினர்களும் இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே இறுதி யுத்தம் நடப்பதாக பிரகடனம் செய்கிறார்கள். இந்தியா முழுவதும் கொந்தளிப்பில் இருப்பதாக திகிலூட்டும் பின்னணி இசை அதிர அறிவிக்கிறார்கள். ஊழலை எதிர்த்து தில்லி, மும்பை, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, சிரீநகர், கொல்கொத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடக்கும் புனிதப் போருக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கிரிக்கெட்டோ இல்லை ஊழலோ எதுவாக இருந்தாலும் தேசபக்தியை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா?
பணம் கடத்தலில் தேர்தல் ஆணைக்குழுவை ஏமாற்றும் அரசியல் கட்சியினர் அமரர் ஊர்திகளும் பயன்படுத்தப்படுகின்றன
இந்திய தேர்தல் ஆணைக்குழு அதிரடி சோதனைகளை மேற்கொண்டாலும் அத்தனையையும் தாண்டி அரசியல் கட்சியினர் நிமிடத்துக்கு நிமிடம் தங்களின் கடத்தல் யுக்தியில் மாற்றம் செய்து ஆணைக்குழுவை ஏமாற்றும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.அமரர் ஊர்தி முதல் பஸ் வரை பணம் கடத்திய கட்சியினர் தற்போது பணம் விநியோகிக்கும் பணியை கனகச்சிதமாக அரங்கேற்றி வருகின்றனர்.
தேர்தல் ஒரு திருவிழா அல்ல!
நமக்குத் தேர்தல் புதிதல்ல. பண்டைக் காலத்தில் குடவோலை மூலம் தங்களை ஆளுகின்ற பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்தனர் என்றும், வேட்பாளர் தகுதி குறித்தும் உத்தரமேரூர் கல்வெட்டுகள் இன்றைக்கும் சொல்கின்றன. பாலாற்றங்கரையில் உள்ள கல்வெட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சொத்துக் கணக்குகளை மக்களுக்குத் தெரியப்படுத்தின எனத் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் நேரக் கட்சிகள்!
1989-ல் நடந்த ஒன்பதாவது சட்டப் பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆரின் மறைவு, அ.தி.மு.க.வில் பிளவு போன்ற அதிரடி அரசியல் மாற்றங்களின் பின்னணியில் நடந்தது என்பது மட்டுமல்ல, தமிழகம் முதன்முறையாக நான்கு முனைப் போட்டியைச் சந்தித்ததும் இந்தத் தேர்தலில்தான். புறா சின்னத்தில் போட்டியிட்ட எம்.ஜி.ஆரின் மனைவி வி.என். ஜானகியின் தலைமையிலான அ.தி.மு.க.வும் (ஜா), சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. (ஜெ)வும் மட்டுமின்றி, சிவாஜிகணேசன் தலைமையிலான தமிழக முன்னேற்ற முன்னணியும் இந்தத் தேர்தலில் களம் கண்டன.
மகாத்மா காந்தியைக் குறித்த சர்ச்சைக்குரிய புத்தகத்தை தடைச்செய்ய மாட்டோம் – மத்திய அரசு
இந்தியாவின் தேசத் தந்தையாக கருதப்படும் மகாத்மா காந்தியடிகளை பற்றி அமெரிக்க எழுத்தாளர் , ஜோசப் லெலிவெல்ட் எழுதிய , “கிரேட் ஸோல், மகாத்மா காந்தி அண்ட் ஹிஸ் ஸ்ட்ரக்ல் வித் இண்டியா” (Great Soul – Mahatma Gandhi and His Struggle with India) என்ற புதிய வாழ்க்கை சரித்திரப் புத்தகம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தேர்தல் கமிஷன் கலக்கலால் கலங்குகின்றன கட்சிகள்: மக்கள் நிம்மதி
முன்பெல்லாம் தேர்தல் என்றால், எங்கு பார்த்தாலும், ஒலிப்பெருக்கி சத்தம், பாடல்கள், குத்தாட்டம், அனல் பறக்கும் பிரசாரங்கள், ஒளி அமைப்புகள், சுவர் விளம்பரங்கள் என அமர்க்களப்படும். ஆனால், இப்போது தேர்தல் கமிஷனின் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள், அரசியல் கட்சிகளுக்கு சோகமாக இருந்தாலும், பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
மின்சக்தியை மிச்சப்படுத்தலாம்
நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் தொடர்ந்து மின்சக்தி செலவாகிக் கொண்டிருப்பது என்பதை நாம் உணர்வ தில்லை. மின்சக்தியைப் பயன்படுத்தும் மற்ற சாதனங்கள் இயக்கத்தினை நாம் கண்டு, கேட்டு உணர்கிறோம். அதனால், மின்சக்தி செலவாகிறது என்பது நம் கண்கூடாகக் காணும் ஒரு விஷயமாகிறது. ஆனால், கம்ப்யூட்டர் விஷயத்தில் நமக்கு இது ஓரளவிற்குத் தெரிந்தாலும், இதில் என்ன செலவாகப் போகிறது என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இருப்பினும் இதன் பயன்பாட்டில் நாம் மிச்சப்படுத்தும் மின்சாரமும் நமக்கு ஒரு சக்திதான். எனவே எந்த வகையில் மின்சக்தியை மிச்சப்படுத்தலாம் எனச் சில எளிய வழிகளைப் பார்க்கலாம்.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி ”சேவா (Self Employed Women’s Association)” என்ற பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்பு வாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.’சேவா’-வின் பொதுச்செயலாளர் ரீமா பென் நானாவதி மும்பையில் அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கேல் எஸ் ஓவனிடம் இதனை தெரிவித்துள்ளார். இச்செய்தியை ஓவன் கடந்த 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)