islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

திருக்குர்ஆன் பிரதி எரிப்பு:ஆப்கானிஸ்தானில் போராட்டம் தொடர்கிறது – ஒன்பது பேர் மரணம்




அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் கிறிஸ்தவ புரோகிதர் ஒருவன் திருக்குர்ஆனின் பிரதியை எரித்ததை கண்டித்து ஆப்கானில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

காந்தஹாரில் எதிர்ப்பாளர்களும்,போலீஸாரும் மோதிக் கொண்டதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் ஐ.நா தலைமையகம் மற்றும் மாகாண அரசின் முக்கிய அலுவலகங்கள் நோக்கி பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததையடுத்து மோதல் வெடித்தது.

மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயமேற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டோர் ஏராளமான அரசு வாகனங்கள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தினர். ஆப்கானிஸ்தானில் தாலிபானின் தலைமையகமாக காந்தஹார் கருதப்படுகிறது. நகரத்தில் க்ரேனேடு குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும், நகரங்கள் முழுவதும் சேதமடைந்த வாகனங்களிலிருந்து புகை வெளிவருவதாகவும் எ.எஃப்.பி செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

சம்பவம் தொடர்பாக இருநூறுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாகாண அரசு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் மஷார்-இ-ஷெரீஃபில் நடந்த போராட்டம் மோதலாக மாறி போராட்டக்காரர்கள் ஐ.நா அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து எட்டு ஐ.நா பணியாளர்களை கொலைச் செய்தனர் .மஷார்-இ-ஷெரீஃபில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களின் துக்கத்தில் பங்கேற்பதாக ஒபாமா அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment