islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

வெளிநாட்டு விஷயங்களிலேயே ஒபாமாவுக்கு அதிக கவனம்: அமெரிக்க மக்கள் கருத்து


உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பதை விட, வெளிநாட்டு விவகாரங்களிலேயே அதிபர் ஒபாமா அதிக கவனம் செலுத்துகிறார் என்று அமெரிக்க மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


ஒபாமாவின் ஆட்சி முறை குறித்து அமெரிக்காவில் தேசிய அளவில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இத்தகவல் தெரியவந்துள்ளது. மார்ச் 25 முதல் 27-ம் தேதி வரை இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

முக்கியமாக இப்போது லிபியா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகம் தலையிடுவதைச் சுட்டிக்காட்டி அமெரிக்க மக்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஒபாமாவின் நிர்வாகம் குறித்து கருத்துத் தெரிவித்தவர்களில் 46 சதவீதம் பேர் அவர் வெளிநாட்டு விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் என்று கருத்துக் கூறியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உள்நாட்டு சுகாதார கொள்கையில் அவர் அதிக கவனம் செலுத்துவதாக 40 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

முதலில் வெளிநாட்டு விவகாரம், லிபியா பிரச்னை, அடுத்ததாக உள்நாட்டு சுகாதாரம், பொருளாதாரம், பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒபாமா முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.

இதற்கு முன் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு அமெரிக்காவின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒபாமா நடவடிக்கை எடுப்பதாக 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இப்போது இது 39 சதவீதமாகக் குறைந்து விட்டது.

முன்னதாக சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருந்த நிலையில் 2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்வு செய்யப்பட்டார். அப்போது அமெரிக்காவில் வேலைவாய்ப்பை அதிகரித்து பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வேன் என்பதே அவரது முக்கியமான வாக்குறுதியாக இருந்தது. ஆனால் பட்ஜெட் பற்றாக்குறையை போக்குவதில் ஒபாமா அதிக கவனம் செலுத்தவில்லை என பெரும்பாலானோர் கருத்துக் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment