சவூதி அரேபியாவின் மதீனா நகரின் சுற்றுப்புரங்களில் 15 - க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கம் உள்ளிட்ட உயர் மதிப்பு உலோகங்கள் செறிவுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. மதீனா மாநிலத்தின் அல் ஹினாக்கியா, அல் மஹத் பகுதிகளில் ஆய்வு செய்த சவூதி அகழ்வாராய்ச்சி அமைப்பினர் இத்தகவலை செய்தியாளர்களிடம் அளித்துள்ளனர். சவூதியிலிருந்து வெளிவரும் ஓகாஸ் அரபு நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது
islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
சவூதி: மதீனா நகரில் 15 இடங்களில் தங்கம் கண்டுபிடிப்பு
சவூதி அரேபியாவின் மதீனா நகரின் சுற்றுப்புரங்களில் 15 - க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கம் உள்ளிட்ட உயர் மதிப்பு உலோகங்கள் செறிவுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. மதீனா மாநிலத்தின் அல் ஹினாக்கியா, அல் மஹத் பகுதிகளில் ஆய்வு செய்த சவூதி அகழ்வாராய்ச்சி அமைப்பினர் இத்தகவலை செய்தியாளர்களிடம் அளித்துள்ளனர். சவூதியிலிருந்து வெளிவரும் ஓகாஸ் அரபு நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது
இம்மை,மறுமையில் வெற்றி பெற..(பெற்றோரை பேணுதல்)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
என் அன்பிற்க்கினிய சகோதர, சகோதரிகளே..
"இஸ்லாம்" இறைவனின் மார்க்கம் "திருக்குர்ஆன்" இறைவனின் வேதம் தான் என்பதற்க்கும் திருமறை முழுவதும் நற் சான்றுகள் நிரம்பி உள்ளன. "அல்லாஹ்"வின் இறுதி தூதர் முஹம்மது"நபி(ஸல்..) அவர்கள் வாழ்ந்து காட்டிய உலக வாழ்க்கையின் வரலாற்று தொகுப்புகள்(ஹதீஸ்), மற்றும் திருக்குர்ஆன் முழுவதும், இவர் இறை துாதர் தான் என்று நற் சாட்சியம் பகர்கின்றன. இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கை நன் நெறியாகும். நாம் வாழும் சமூகத்தில் நம் கண் முன் நிகழும் உண்மை நிகழ்வுகள் பல... அதில் பெற்ற தாய், தந்தையரை பேணுபவரின் வாழ்க்கை தரத்தை சற்று கூர்ந்து கவனித்தால் பல பேர் மேம்பட்டவராகவே! இருப்பதை காண்கிறோம். இது "அல்லாஹ்" நமக்கு அளிக்கும் மறைவான அருள் ஆகும். இறைவனின் கூற்றையும், நபிகள் நாயகம்(ஸல்..) அவர்களின் சொல், செயல்,அங்கீகாரம், இவை அ னைத்தையும் கற்று, சற்று சிந்தித்து, செயல்பட்டால் நீங்களும் இம்மை, மறுமை இவ் விரண்டிலும் மேம்பட்டவரே!
மதச்சார்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களின் வரலாறு இந்தியாவில் மறைக்கப்பட்டுள்ளது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
இந்திய பத்திரிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் மதச்சார்பின்மை இல்லாத முஸ்லிம் ஆட்சியாளர்களின் குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையே மக்களுக்கு வழங்கி வருகின்றது. திப்பு சுல்தான் போன்ற மதச்சார்பற்ற ஆட்சியாளர்களைப் பற்றிய வரலாறுகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது.’ என உச்சநீதிமன்றதின் மூத்த தலமை நீதிபதியான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!
இனப்படுகொலை என்ற தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்து பாசிஸ்டுகள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகத்தான் கோத்ரா தீவைப்பு இருக்கமுடியும்
கோத்ரா வழக்கில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில்பெட்டியை தீ வைத்துக் கொளுத்துவது என்று கோத்ரா நகரைச் சேர்ந்த முஸ்லீம்கள் முதல்நாளே சதித்திட்டம் தீட்டி, மறுநாள் அதனை நிறைவேற்றியிருக்கின்றனர்” என்று கூறி 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்திருக்கிறது குஜராத் சிறப்பு நீதிமன்றம். எனினும் குற்றம் சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேருக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை என்பதால், அவர்களை விடுதலையும் செய்திருக்கிறது.
National Defence Academy (N D A) தேசியப் பாதுகாப்பு அகாதெமி
ஒரு தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முப்படைகளின் பங்கு மிக முக்கியமானது. தன்னலம் கருதாத, போராட்ட குணமுள்ள, தீரமிக்க இளைஞர்களே இதற்கு உயிர்நாடி. நாட்டின் முப்படைகளில் சேர, பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து, பட்டம் வழங்கி, வேலையையும் அளிக்கிறது தேசியப் பாதுகாப்பு அகாதெமி (நேஷனல் டிபன்ஸ் அகாதமி). இதன் வரலாறு மிக நெடியது.
எம்.பி.பி.எஸ்., பி.இ. சேர விண்ணப்பம் எப்போது?
தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்., பி.இ. படிப்புகளில் சேர மே 15-ம் தேதிக்குப் பிறகு விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு பி.இ. படிப்பில் 2.1 லட்சம் இடங்கள்: மன்னர் ஜவஹர்
பொறியியல் படிப்புகளில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 2.1 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.
நிலைதடுமாறாத நீதிபதி!
தில்லியில் நடந்த ஐந்தாவது எம்.சி. சீதல்வாட் நினைவுச் சொற்பொழிவின்போது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா வெளியிட்டிருக்கும் கருத்துகள் உச்ச நீதிமன்றத்திலிருந்து கீழமை நீதிமன்றங்கள்வரை உள்ள அத்தனை நீதிபதிகளும் கவனத்தில்கொள்ள வேண்டிய, நடைமுறையில் பின்பற்ற வேண்டிய கருத்துகள். அவர் தெளிவுபடுத்தி இருப்பதுபோல, ஒவ்வொரு நீதிபதியும் சட்டத்துக்கும் நிர்வாகத்துக்கும் இடையே உள்ள மெல்லிய இடைவெளியைச் சரியாகவும் துல்லியமாகவும் புரிந்துகொண்டு விட்டால், பிறகு நீதிமன்றம் வரம்பு மீறுகிறது என்கிற குற்றச்சாட்டோ, நிர்வாகத்துக்கு அறிவுரை கூறவேண்டிய கட்டாயமோ ஏற்படாமல் தவிர்க்கலாம்.
குஜராத்தின் வளர்ச்சிக்காக கொல்லப்படும் ம.பி தொழிலாளர்கள்!
“ஒருபுறம் இந்தியா ஒளிர்கிறது என்றும் தொழில்துறையில் அபார வளர்ச்சி என்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகட்டான விளம்பரங்கள் – உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற வீரர்களுக்கு சில கோடிகளை மாநில அரசுகள் அறிவித்ததன் மூலம் தேச நலனுக்கு வித்திட்டதாக படாடோப செய்திகள் – மறுபுறம் குறிப்பாக ஊடகங்கள் குஜராத்தைப் பார் ! மோடி அரசின் வளர்ச்சியைப் பார்!! என தம்பட்டங்கள் வேறு. ஆனால் உலகமயமாக்கல் விளைவினால் விவசாயம் அழிந்து, வாழ வழிதேடி மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்திற்கு வரும் ‘கூலி’ தொழிலாளிகள் ‘சிலிக்கோசிஸ்’ என்ற அபாயகரமான உயிர்க்கொல்லி வியாதியினால் தாக்குண்டு தெரிந்தே, தடுக்க இயலாமல் “சாவை” வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது”
Subscribe to:
Posts (Atom)