islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
2ஜியைத் தொடர்ந்து கேஜி...!
2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.
ஒரினச்சேர்க்கை:பிரான்ஸ் பார்லிமென்ட் மறுப்பு
பிரான்ஸ் நாட்டில் எதிர்கட்சியான சோசலிஸ்ட் கட்சி கொண்டு வந்த ஒரினச்சேர்க்கை திருமண மசோதா தாக்கலுக்கு அந்நாட்டு சட்டவல்லுநர்கள் ஏற்க மறுத்ததை அடுத்து பார்லிமென்ட் நிறுத்திவைத்தது.
அந்நாட்டு மக்கள் ஆதரவு இருந்தபோதும் பார்லிமென்ட் ஏற்க மறுத்துவிட்டது.மசோதா குறித்து பார்லிமென்ட் கீழவையில் நடந்த ஓட்டெடுப்பில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவாக 222 பேரும் எதிராக 293 பேரும் வாக்களித்ததால் மசோதா மறுக்கப்பட்டது.ஸ்பெயின், பெல்ஜியம்நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏகபோக மரண வியாபாரத்தில் அமெரிக்கா
அமெரிக்காவின் ஆயுத வணிகம் ரொம்பச் சிக்கலானது. பிற உற்பத்திப் பொருட்களின் வணிகத்தை ஒத்ததல்ல இது. முன்னால் குடியரசுத் தலைவர் ஐசனோவர் இதனை Military Industrial Congressional Complex என்றார். அதாவது இராணுவம், தொழிற்துறை மற்றும் பாராளுமன்றம் (அரசியல்) ஆகியவற்றின் சிக்கலான ஒருங்கிணைவு. எனவே இதில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியல் நலன்கள் ஆயுத உற்பத்தி கார்ப்பரேட்களின் வணிக நலன்கள், இராணுவ நலன்கள் எல்லாம் ஒன்றிணைகின்றன.
விபரீத ஆலோசனை!
உலக வங்கிக்கு இந்தியா மீது அளவற்ற பாசம். அதனால்தான் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக அவ்வப்போது ஏதாவது ஓர் ஆலோசனையை இந்திய அரசுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. "மாறிவரும் இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு- உலக வங்கி அறிக்கை' மே 17-ம் தேதி வெளியானது. இந்த அறிக்கையின் பரிந்துரை என்னவென்றால், இந்திய அரசு பொது விநியோகத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதுதான்.
Subscribe to:
Posts (Atom)