islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

போலி தவ்ஹீத்வாதிகள் .....

மீலாது விழாவில் பெரியார்தாசன்


தவ்ஹீத் இயக்கம் என்று சொல்லிக்கொள்ளும் இயக்கம் நடத்தும் நிகழ்வில் பெரியார்தாசன்


இந்தபடங்களுக்கு இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. நீங்களே போலி தவ்ஹீத் வா(வியா)திகளை புரிந்து கொள்ளுங்கள்.

தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு



மலேகான் குண்டுவெடிப்பு போன்ற நாட்டின் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய பால் தாக்கரேவின் பேரன் கைது!




மும்பையி்ல் தடை செய்யப்பட்ட டான்ஸ் பார் நடத்தியதுடன், பெண்களைப் பாலியல் தொழிலுக்‌கு கட்டாயப்படுத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அந்நியர் புகலென்ன நீதி?




ஓ..உலக மாந்தர்களே..!!!உங்களைப்படைத்த ஒரே இறைவனை மரணத்திற்குமுன் அஞ்சிக்கொள்ளுங்கள்......




சீட் தானம்:முஸ்லீக் தலைமைக்கு எதிராக ஃபாத்திமா முஸஃபர்






தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட சீட் தகராறில் சமரசம் ஏற்படுத்துவதற்காக கிடைத்த 3 சீட்டில் ஒன்றை தானமாக வழங்கிய முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மகளிரணி களமிறங்கியுள்ளது.

ஜப்பான் நிலநடுக்கம்: 100 பேருடன் கப்பல் அடித்து செல்லப்பட்டது



சேலம் செவ்வாய்பேட்டையில் பெண்கள் பயான்




சேலத்தில் கிறிஸ்தவ சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்






வெடிக்குண்டு தயாரிக்க ஹிந்து சிறார்களுக்கு பயிற்சி அளித்த பிரவீன் முத்தலிக்





இந்தியாவில் நடந்த பல்வேறு வெடிக்குண்டு தாக்குதல்களில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் பங்கு சுவாமி அஸிமானந்தாவின் வாக்குமூலத்தை தொடர்ந்து வெட்ட வெளிச்சமானது. அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்த பிரவீன் முத்தலிக் மலேகான் 2008 குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாவார்.

மதச்சார்பின்மை எனும் அரசியல் மாண்பு






மதச்சார்பின்மை என்பதற்கு வெப்ஸ்டர் அகராதி தரும் வரையறை – “பொதுக் கல்வியும் குடிமைக் கொள்கை சம்பந்தப்பட்ட இதர விஷயங்களும் மதக்கூறு ஏதுமின்றி நடத்தப்பட வேண்டும் என்கிற கண்ணோட்டம். ” மதம் என்பது தனிமனித நம்பிக்கை எனும் தெளிவான முடிவுக்கு வந்து, குடிமக்களின் பொது விவகாரங்களிலிருந்து அதை விலக்கி வைப்பது என்பதே மதச்சார்பின்மை ஆகும். ஒரு நாட்டிலுள்ள சகல மதங்களுக்கும் அந்த நாட்டின் அரசமைப்பு உள்ளிட்ட பொது விவகாரங்களில் சம அந்தஸ்து தருவதல்ல மதச்சார்பின்மை. அது இந்தக் கோட்பாட்டிற்கு நேர்விரோதமான நடைமுறையாகிப் போகும். ஒரு மதத்திற்குப் பதிலாக பல மதங்களின் தலையீடு பொதுவாழ்வில் இருக்கும் என்பது மதச்சார்பின்மை ஆகாது, அது பல மதச் சார்பு ஆகிப் போகும். “சம அந்தஸ்து” என்பதற்கு வரையறை தரமுடியாமல் பெரும்பான்மை சிறுபான்மை மதங்களுக்கிடையே மோதலை உருவாக்குவதில் கொண்டு போய்விடும்.


போராட்டமா? மிரட்டல்களா?





கடமையைச் செய்துவிட்டு, உரிமைக்காகப் போராடுவது தான் தொழிற்சங்கங்களின் சித்தாந்தம். ஆனால், இப்போதோ நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. கடமையைச் சரிவரச் செய்யாமல் உரிமைக்காகத் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

ஏசி வசதி இல்லாததால் மணமகன் வீட்டார் ரகளை : மணமகள் மறுத்ததால் நடக்க இருந்த திருமணம் ரத்து




திருமண மண்டபத்தில், "ஏசி' வசதி இல்லாததால், மணமகன் வீட்டார் ரகளையில் ஈடுபட்டனர். திருமணம் ரத்து செய்யப்பட்டது. ஹூப்ளியைச் சேர்ந்தவர் டாக்டர் அமீத். இவருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் சுவேதாவுக்கும், பசவேஸ்வர நகரிலுள்ள கல்யாண மண்டபத்தில் நேற்று வரவேற்பும், இன்று திருமணமும் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.

சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக தெரு முனை பிரச்சாரம்




சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிளையில் பெண்கள் பயான்






சேலம் மாவட்டம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்



நைஜீரியாவில் ஈயம் கலந்த மண்ணில்விளையாடிய 400 குழந்தைகள் பலி




நைஜீரியாவின் வடக்கில் சட்டத்திற்கு புறம்பாக தோண்டப்பட்ட சுரங்கங்களில் இருந்து, வெளியான ஈயம் கலந்த விஷ மண் மற்றும் தண்ணீரில் விளையாடிய 400க்கும் அதிகமான குழந்தைகள் இது வரை பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் 500 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குவாண்டனாமோவில் மீண்டும் ராணுவ விசாரணைக்கு அனுமதி




கியூபாவில் குவாண்டாமோ சிறைக் கைதிகளின் ராணுவ விசாரணை மீண்டும் துவக்குவதற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அனுமதி அளித்துள்ளார். இதனால் ஒபாமாவின் குவாண்டனாமோ சிறைக் கொட்டகையை இழுத்து மூடுவேன் என்ற முக்கிய தேர்தல் வாக்குறுதி நிறைவேற இன்னும் காலதாமதமாகும் என தெரிகிறது.

எகிப்து:மு​ஸ்லிம்-கிறி​ஸ்தவர்களிடை​யே மோதல் - 7 பேர் பலி





எகிப்தில் முஸ்லிம்-கிறிஸ்தவர்களிடையே நடந்த கலவரத்தில் 7 பேர் மரணமடைந்துள்ளதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி தெரிவிக்கிறது. ஆனால், எகிப்து உள்துறை அமைச்சகம் இதுவரை எத்தனை பேர் கலவரத்தில் இறந்தார்கள் என்பதுக் குறித்து தெரிவிக்கவில்லை.

பொறுப்பில்லாத பிரதமர்!





தான் செய்த தவறுக்கான பழியை அடுத்தவர் மேல் போட்டுத் தப்பித்துக் கொள்வது என்பது அதிகார வர்க்கத்துக்கே உரித்தான "உயரிய' பண்புகளில் ஒன்று. இந்தியாவின் இந்நாள் பிரதமரான மன்மோகன் சிங், ஒரு முன்னாள் அரசு உயரதிகாரி என்பதால், அவரது அடிப்படை மனோபாவம் மாறாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

முஹ்யித்தீன் மவ்லித் ஒரு பார்வை




தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறை வேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து இதை அறியலாம்.

மாணவிகளுக்கு இலவச ரயில் சீசன் டிக்கெட்: மம்தா பானர்ஜி அறிவிப்பு







சர்வதேச மகளிர் தின விழா இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசிய உறுப்பினர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

தொண்டர்கள் இனி ஏமாற மாட்டார்கள்..!








தொண்டர்கள்..!

அரசியல் கட்சிகளின் அஸ்திவாரங்கள் என்றால் அது மிகையாகாது.!

கொடியைப் பிடிக்கத் தொண்டர் இல்லாவிட்டால், எந்தவொரு தலைவரும் கோட்டையைப் பிடிக்க கனவுகூட காண முடியாது..!

தொண்டர்கள் இன்றிக் கட்சியும் கிடையாது; ஆட்சியும் கிடையாது; சொந்த பந்தங்களுக்குப் பதவிகளும் கிடைக்காது.

மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு





இந்த ஆண்டு முதல், நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.


மருத்துவம், `என்ஜினீயரிங்' போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு பல்வேறு மாநிலங்களில் தனியாக நுழைவு தேர்வு நடைபெற்று வந்தது.

இளம் பெண்களிடம் பாலியல் சேட்டை : அமெரிக்க இந்து மத சாமியாருக்கு தண்டனை





அமெரிக்காவில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு, தண்டனை வழங்கப்பட உள்ளது. அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் "பர்சனா தாம்' என்ற ஆஸ்ரமம் உள்ளது.

பாகிஸ்தானில் பரபரப்பான விளம்பரம்: மதச்சார்பற்ற இந்தியாவே விளக்கம் தா?




தில்லியிலிருந்து லாகூருக்குச் செல்லும் சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்து 70 பேரைப் பலி வாங்கியவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை இந்திய அரசு விளக்க வேண்டும் என்று கோரும் விளம்பரம் பாகிஸ்தானில் வெளியாகும் அனைத்துப் பத்திரிகைகளிலும் திங்கள்கிழமை பிரசுரம் ஆனது.


மார்ச் 8 இன்று ''மகளிர் தினம்'' ..இஸ்லாத்தில்....





இன்று ''மகளிர் தினம்'' என்று உலக மக்களால் கொண்டாடப்படுகிறது. இது போன்ற தினங்கள் வைத்து கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.இஸ்லாம் பெண்களுக்கு நிறைய உரிமைகளையும் சிறப்பையும் வழங்குகிறது.அதை கீழ்கண்ட குர் ஆன் வசனங்களிலிருந்தும் ஹதீஸ் களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

இந்து மதமும் பெண்களும் (பாகம் 2)


மணமுடிக்கப் போகின்றவளை ஏற்கனவே பலருக்கு மனைவியாக இருந்தவள் என்றும், அவர்களோடு படுக்கையில் இருந்தவள் என்றும் சொல்லி கொச்சைப்படுத்தும் திருமணங்களை பார்த்தோம்.

கருணைக் கொலை​க்கு உச்சநீதிமன்​றம் மறுப்பு




கடந்த 37 வருடமாக கோமாவில் இருக்கும் 60 வயது நர்சை கருணைக் கொலை செய்ய அனுமதி மறுத்து விட்டது உச்சநீதிமன்றம்.

மும்பையைச் சேர்ந்தவர் அருணா ராமச்சந்திரா ஷன்பாக். இவருக்கு தற்போது 60 வயதாகிறது. மும்பையில் உள்ள எட்வர்ட் கிங் மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றி வந்தவர் அருணா.

மலேகான்:ஏ.டி.எஸ் தேவையில்லாமல் அவசரம் காட்டியுள்ளது - சி.பி.ஐ




2006-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை வேகமாக முடிப்பதற்காக தேவையில்லாமல் மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை(ஏ.டி.எஸ்) அவசரம் காட்டியுள்ளது என சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

லிபிய நெருக்கடி: உலக உணவு விலை கடும் உயர்வு!




லிபியாவில் ஏற்பட்டுள்ள வன்முறை, கலவரம் காரணமாக சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.


'காஷ்மீர் நிலைதான் லிபியாவிலும்' - இந்தியாவின் ஆதரவைக் கேட்கும் கடாபி!!





லிபியாவில் கலவரக்காரர்களுக்கபு எதிராக ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், காஷ்மீரில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் போன்றதே. எனவே இந்தியா தன்னை ஆதரிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மொம்மர் கடாபி.

யு.எஸ் முஸ்லீம் சமூகம் மீது விசாரணை: மக்கள் எதிர்ப்பு



யு.எஸ் முஸ்லீம் சமூகம் மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல நூறு மக்கள் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் குவிந்து போராட்டம் நடாத்தினர்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஹோஸ்னி முபாரக்






எகிப்தில் 30 ஆண்டுகளாக ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தார். அவர் பதவி விலக வலியுறுத்தி பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

17 நாட்கள் நடை பெற்ற போராட்டத்துக்குப் பிறகு அவர் பதவி விலகினார். அவரது மனைவி மற்றும் மகன்கள் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டனர்.