மும்பையி்ல் தடை செய்யப்பட்ட டான்ஸ் பார் நடத்தியதுடன், பெண்களைப் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் புறநகர் கிழக்கு பகுதியான சான்டாகுரூஸ் உள்ளிட்ட ஏரியாக்களில் மகாராஷ்டிரா அரசால் தடை செய்யப்பட்ட டான்ஸ் பார்கள் நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல்கிடைத்தது. காவல்துறையினர் நேற்று பகல் 12.30 மணியளவில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் டான்ஸ் பார் உரிமையாளர் என கூறப்படும் நிஹார் தாக்கரே என்பவரைக் கைது செய்தனர். அவருடன் 9 இளம் பெண்களும் சிக்கினர்.
கைது செய்யப்பட்ட நிஹார் தாக்கரே சிவசேனா கட்சித்தலைவர் பால்தாக்கரேயின் பேரன் ஆவார். பால்தாக்கரேயின் மூத்த மகன் பிந்தா என்பவரின் மகன் தான் நிஹார் தாக்கரே. பிந்தா திரைப்படத்தயாரிப்பாளராக இருந்தார். இவர் கடந்த 1996-ம் ஆண்டு வாகன விபத்தில் பலியானார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நிஹார் தாக்கரேயைக் காவல்துறையினர் விசாரித்த போது இதே போன்று டான்ஸ் பார்களைப் பந்த்ரா, ஓர்லி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தி வருவதும் தெரியவந்துளளது. மேலும் டான்ஸ் பாரில் பணியாற்றிய இளம் பெண்களைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நிஹார் தாக்கரே மீது ஆள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டான்ஸ் பாரினை நிர்வகித்து வந்ததாக ரமேஷ் ஷெட்டி, ஹரீஸ் ஷெட்டி, அர்ஜூன் ஷெட்டி, அனு ஷெட்டி, என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
source.inneram
No comments:
Post a Comment