islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

லிபிய நெருக்கடி: உலக உணவு விலை கடும் உயர்வு!




லிபியாவில் ஏற்பட்டுள்ள வன்முறை, கலவரம் காரணமாக சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.




எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் விளைவாக உலக உணவு விலையில் அதிகபட்ச உயர்வு கண்டுள்ளதாக ஐநா சபையின் உணவு மற்றும்ம விவசாய அமைப்பு (UNO's Food and Agriculture Organisation) அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜனவரி மாதம் 231 புள்ளிகளாக இருந்த உலக உணவு குறியீட்டெண், கடந்த பிப்ரவரி மாதம் 236 புள்ளிகளாக உயர்ந்தது. இப்போது மார்ச் மாதம் இந்த குறியீட்டெண் 240 புள்ளிகளைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முழுக்க அமைதியின்மையும் கலவரமும் தலைதூக்கியுள்ளன. இந்த நிலைக்கு மேற்கத்திய, வளர்ந்த நாடுகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அதே நேரம், இந்த அமைதியின்மை காரணமாக எண்ணெய் வர்த்தகம் அடியோடு தனது சமநிலையை இழந்துள்ளது.

எண்ணெய் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முதலிடத்தில் உள்ள லிபியா, ஈராக், ஏமன், ஈரான், பஹ்ரைன், எகிப்து என அனைத்து நாடுகளிலும் ஆட்சிகளுக்கெதிரான கலவரங்கள் உச்சத்தில் உள்ளன. இந்தக் கலவரங்களைத் தூண்டிவிடுவதே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகள்தான் என பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜனநாயகம் என்ற பெயரில் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தை முழுமையாகக் கையகப்படுத்துவதே இந்த நாடுகளின் ஒரே குறிக்கோள் என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில், கலவரங்கள் காரணமாக எண்ணெய் வர்த்தகம் அடியோடு ஸ்தம்பித்துப் போயுள்ளது. உற்பத்தி, ஏற்றுமதி போன்றவை நின்றுவிட்டதால், எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் உணவுப் பொருள்களின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உணவுப் பொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக ஐநாவின் விவசாய அமைப்பு புள்ளிவிவரம் வெளி்யிட்டுள்ளது. 231 புள்ளியிலிருந்து 236 புள்ளிகளாக உணவு விலைக் குறியீட்டெண் உயர்ந்துள்ளது. காய்கறிகள், இறைச்சி, அரிசி போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக இந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது.

லிபியாவிலிருந்து நாளொன்று 850000 பேரல்களிலிருந்து 1 மில்லியன் பேரல்கள் வரை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இப்போது இது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தவரை கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதல்முறையாக பேரலுக்கு 117 டாலர்கள் என்ற உயர்வை எட்டியுள்ளது.

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளிலும் இந்த பாதிப்பு எதிரொலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
oneindia

No comments:

Post a Comment