சர்வதேச மகளிர் தின விழா இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசிய உறுப்பினர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்திய ரெயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்யும் அனைத்து மாணவிகளுக்கும் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை மாதாந்திர இலவச சீசன் டிக்கெட் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று ரயில் பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார். மேலும், ரயில்வேத்துறை சார்பில் பல்வேறு நகரங்களில் பெண்களுக்கான தொழிற் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும் மம்தா கூறினார்.
No comments:
Post a Comment