islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

'காஷ்மீர் நிலைதான் லிபியாவிலும்' - இந்தியாவின் ஆதரவைக் கேட்கும் கடாபி!!





லிபியாவில் கலவரக்காரர்களுக்கபு எதிராக ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், காஷ்மீரில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் போன்றதே. எனவே இந்தியா தன்னை ஆதரிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மொம்மர் கடாபி.


லிபியாவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முக்கிய நகரங்களைப் பிடிக்கும் முயற்சியை வெளிநாடுகளின் துணையுடன் தொடர்கிறார்கள். ஐநா சபை, ஐரோப்பிய நாடுகள், சில ஆப்ரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்றவை ஆர்ப்பாட்டக்காரர்களை வெளிப்படையாக ஆதரிக்கின்றன.

இவர்களை அடக்க போர்விமானங்களையும் பீரங்கிகளையும் பயன்படுத்தி வருகிறார் அதிபர் கடாபி. அமெரிக்கா அல்லது ஐநா தலையிட்டால் ரத்த ஆறு ஓடும் என எச்சரித்துள்ளார்.

இதுவரை நடந்த கலவரத்தில் 6000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க மீடியா செய்தி பரப்பு வருகிறது. எனவே கடாபியை சர்வதேச நீதிமன்றத்தில் கிரிமினல் குற்றவாளியாக நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன இங்கிலாந்தும் அமெரிக்காவும். அவர் மீது ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதையடுத்து தனக்கு ஆதரவு தேடும் முற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கடாபி.

கடந்த வாரம் நடந்த லிபிய தேசிய நாள் கொண்டாட்டத்தின்போது 5 மணிநேரம் பேசினார் கடாபி. தனது பேச்சின் போது, "காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளைப் போன்றதுதான், லிபியாவில் அரசுக்கு எதிரானவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையும். எனவே இந்தியா தன்னை ஆதரிக்க வேண்டும்", என பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அவர் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி லிபியாவுக்கு எதிரான ஐநா வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாடு தனக்கு மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்காலத்தில் தங்களது எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் அனைத்தையும் இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கே தரப்போவதாகவும் அவர் கூறினார்.
source;thatstamil

No comments:

Post a Comment