islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

யு.எஸ் முஸ்லீம் சமூகம் மீது விசாரணை: மக்கள் எதிர்ப்பு



யு.எஸ் முஸ்லீம் சமூகம் மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல நூறு மக்கள் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் குவிந்து போராட்டம் நடாத்தினர்.



முஸ்லீம் சமூகத்தினரை இலக்காக வைத்து விசாரணை நடாத்துவது நியாயமற்றது என முஸ்லீம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. போர்ட்ஹீட் துப்பாக்கிச் சூடு மற்றும் டைம்ஸ் சதுக்க கார்குண்டு சதி தொடர்பான நிகழ்வுகள் விசாரணைக்கு மேற்கொள்ளப்படுகின்றன.

முஸ்லீம்கள் மீதான விசாரணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அந்த சமூக மக்கள் பெரும் மழையை பொருட்படுத்தாமல் கூட நியூயார்க் வீதிகளில் அணிவகுத்து வந்தனர். இந்த எதிர்ப்பு போராட்டத்தில் திரண்டவர்கள் தங்களின் கைகளில் இன்று நான் முஸ்லீமாகவே இருக்கிறேன் என்று எழுதியிருந்தனர்.

குடியரசு நாடாளுமன்ற உறுப்பினரும், உள்நாட்டு பாதுகாப்பு கமிட்டி தலைவருமான பீட்டர்கிங் அமெரிக்க முஸ்லீம் சமூகத்தில் உள்ள தீவிரவாதி நிலை குறித்து பல்வேறு சாட்சிகளை விசாரணைக்கு அழைத்திருந்தார்.

யு.எஸ் சில் உருவெடுக்கும் தீவிரவாத சதி குறித்து பொலிஸ் மற்றும் எப்பிஐ மேற்கொண்ட விசாரணைக்கு சில முஸ்லீம் தலைவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என பீட்டர்கிங் குறைபட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற பைசல் ஷாசத் காரில் குண்டு வைக்க முயன்றார். 2009 ம் ஆண்டில் போர்ட் ஹீட்டில் யு.எஸ் ராணுவ மேஜன் நிடால் ஹசன் துப்பாக்கியால் சுட்டதில் 13 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து புதிய உள்நாட்டு அச்சுறுத்தல் உருவெடுத்துள்ளதாக அரசியல்வாதிகளும் பொலிசாரும் பேசினர்.

போராட்டம் நடாத்தியவர்களிடம் முஸ்லிம் ஜனநாயக உறுப்பினர் ஆண்ட்ரேகார்ன் பேசுகையில் பீட்டர் கிங்க்கு தெரிவிக்க விரும்பும் விடயம், உங்களைப் போல அயல் நாட்டினர் மீது வெறுப்பு காட்டும் நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என்றார்.

போராட்டம் நடாத்திய மக்கள் கூடிய சதுக்கத்தில் மொகல் ரஸ்சல் சீமன்ஸ் மற்றும் இமாம் பெய்சல் அப்துல் ரவூப் உரையாற்றினர். நொறுக்கப்பட்ட உலக வர்த்தக மையக்கட்டிடம் அருகே இஸ்லாமிய மையம் அமைக்க பிரசாரம் செய்யும் தலைவர்கள் இவர்கள் ஆவார்கள்.

No comments:

Post a Comment