islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ரவுடி மரியம்பிச்சை மரணம்! அதிமுக-தமுமுக ரவுடித்தனம்!! நேரடி ரிப்போர்ட்!!!


‘அம்மா’ ஆட்சியில் நாம் நிறைய போராட்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்பதைத்தான் ரவுடி மரியம்பிச்சையின் மரணத்தில் அதிமுக-தமுமுக காலிகளின் ரவுடித்தனம் தெரிவிக்கிறது.

மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?-கண்ணை மறைக்கும் காவிப் புழுதி


மதம் மாறினால் நடை, உடை, பாவனை, மொழி, தேசப்பற்று அனைத்தும் மாறிவிடுமென்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் பிரச்சாரம் செய்கிறது. அந்த அவதூறு பிரச்சாரத்தை வலுவான வாதங்களோடு வேரறுக்கும் கட்டுரை

ஈரானில் பொதுமக்கள் முன்னிலையில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை!


ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று, ஐந்து பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மெட்ரிக் தேர்வில் முதல் ரேங்க் பெற்ற மாணவிகளின் மதிப்பெண் விவரம்

சேலத்தில் மீட்கப்பட்ட 17 குழந்தை தொழிலாளர்கள் இன்ஜினியரிங் படிக்கின்றனர் ஸ்மைல் திட்ட இயக்குநர் தகவல்


சேலத்தில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களில் 17 பேர் தற்போது இன்ஜினியரிங் படித்து வருவதாக ஸ்மைல் திட்ட இயக்குநர் தெரிவித்தார்.

பி.இ. கலந்தாய்வு: 4 இடங்களில் நடத்த திட்டம்: தமிழக அரசு



பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை சென்னை உள்பட 4 இடங்களில் நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

மாட்டை முன்வைத்து மீண்டும் மதக் கலவரம்?


ஆர்.எஸ்.எஸ். – காவல் துறை கூட்டுச் சதி

மதுரை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மாட்டுத் தலை வீசிய மர்ம நபர்கள்'' என்ற செய்தியை மார்ச் 2 அன்று வாசிக்கையில், மதுரையில் பொதுவாக நிலவும் ஓர் அமைதியான சூழலைத் தகர்க்க யாரேனும் முடிவு செய்து விட்டார்களோ என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது.

இனப்படுகொலை-மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்தவேண்டும்-அமெரிக்கா


2002-ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில் மோடியின் பங்கினை குறித்து விசாரணை நடத்த வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

சூரியனைச் சுற்றாத 10 மிதக்கும் கோள்கள் கண்டுபிடிப்பு!



விண்வெளியில் உள்ள கோள்கள் பொதுவாக ஏதாவது ஒரு சூரியனை சுற்றி வரும். ஆனால் அப்படி சூரியனை சுற்றாமல் தனியே மிதக்கும் 10 புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

என் மகன் தீவிரவாதி இல்லை; நியாஸின் தாய் பேட்டி


பிரான்ஸில் சந்தேகத்தின் பேரில் கைதான மேலூரைச் சேர்ந்த பொறியாளர் முகமது நியாஸ் எந்தத் தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லாதவர்; அவரை பிரான்ஸிலிருந்து மீட்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் பாத்திமா தெரிவித்தார்.

வரதட்சிணையால் நின்றுபோன திருமணம்! அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட்!!


சென்னையில் 100 பவுன் நகைக்காக ஒரு திருமணம் நின்று போனது. வினவு செய்தியாளர் அந்த மணமகளை சந்தித்து திரட்டிய தகவல்கள் மூலம் வரதட்சணையின் சமூக பரிமாணத்தை அலசும் ரிப்போர்ட்!

நாமக்கல்-மின்சார ஸ்கூட்டர், தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்


மின்சார ஸ்கூட்டர் மற்றும் தையல் இயந்திரங்களை இலவசமாகப் பெற தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சோ.மதுமதி தெரிவித்துள்ளார்.

குஜராத் அரசு எனக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது-சஞ்சீவ் பட் குற்றச்சாட்டு


குஜராத் இனப்படுகொலை தொடர்பாக மாநில அரசு எனக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும்,ஆதலால் சட்ட ஆதரவு கிடைக்கும் வரை வாக்குமூலம் பதிவுச் செய்வதை தள்ளி வைக்க சஞ்சீவ் பட் நானாவதி கமிஷனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் வாக்குமூலம் பதிவு செய்வதை ஒத்திவைக்க இயலாது என கமிஷன் தெரிவித்துள்ளது.

இன்று பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்: வேலைவாய்ப்புக்காக பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு- முதல்வர் உத்தரவு


பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்படுகின்றன. இந்த சான்றிதழ்களை வேலைவாய்ப்புக்காக பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சியில்-மே 30-ல் பிறப்புச் சான்றிதழ் சிறப்பு முகாம்


சேலம் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் மே 30-ம் தேதி நடைபெறும் என்று சேலம் மாநகர கமிஷனர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் பட்டியலை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது.




இந்தியாவில் தேடப்பட்டு வரும் முக்கியமான பயங்கரவாதிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்த பயங்கரவாதிகள் பட்டியலை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது.

அமெரிக்கா -அடுத்தடுத்து சூறாவளி: பலி 200 ஐ தாண்டியது




அமெரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள ஒக்லஹாமா, கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்கள், நேற்று வீசிய பயங்கர சூறாவளியால் பெரும் பாதிப்படைந்தன. இச்சூறாவளிக்கு இன்று மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை, 200ஐ தாண்டி விட்டது.

இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல



இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடியாகவே சொல்வதற்கு முனைவது தான்.

நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.

நாக்கை அறுத்துக் கொண்டவருக்கு அரசுப் பணி


தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றால் தனது நாக்கை அறுத்துக்கொள்வதாக வேண்டிக்கொண்டு அந்த பிரார்த்தனையை நிறைவேற்றிய ஒரு பெண்மணிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா மதிய உணவுத்திட்ட உதவியாளராக நியமித்திருக்கிறார்.

தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 3,049 பேர் ஹஜ் பயணம்



தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 3,049 பேர் புனித ஹஜ் பயணத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நுழைவுத்தேர்வு:கேரளாவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து முஸ்லிம் மாணவர்கள் சாதனை



கேரள மாநிலத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில் 77,335 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் முதல் இரண்டு இடங்களை முஸ்லிம் மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

'நடிகர்' சச்சினுக்கு வரிச் சலுகை -வருமானவரித் துறையின் 'அபார' லாஜிக்



நம் இந்திய நாடே சச்சின் டெண்டுல்கரை ஒரு மகான் கிரிக்கெட் வீரராக, கிரிக்கெட் கடவுளாக அபத்த வழிபாடு செய்துவருகிறது. ஆனால் சச்சின் டெண்டுல்கரோ தான் ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல ஒரு நடிகர் அல்லது கலைஞர் என்று கூறி வரிச்சலுகை பெற்றுள்ளார். எதற்கு? தான் கோடி கோடியாக பணம் ஈட்டும் விளம்பர வருவாய்க்குத்தான் அவர் வரிச்சலுகை பெற்றுள்ளார்.

குஜராத் இனப்படுகொலை:உண்மையை மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் அமீத் ஷா முயன்றார்-சஞ்சீவ் பட்



கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நரந்திரமோடி கூட்டிய உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்ற விபரத்தை சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி)முன்பாக ஆஜராகி வெளியிடுவதை தடுக்க குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷா முயன்றார் என மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.

பாப்ரி மஸ்ஜித்:லிபர்ஹான் கமிஷன் அறிக்கையின் படி நடவடிக்கை இல்லை


ஹிந்துத்துவ பாசிஸ்டுகளால் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவத்தை குறித்து விசாரணை நடத்திய லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் சி.பி.ஐ புதிய வழக்கை பதிவு செய்யாது. உள்துறை அமைச்சக அதிகாரிகளும், சி.பி.ஐ அதிகாரிகளும் நடத்திய சந்திப்பில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.

கோத்ரா:குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மேல் முறையீடு


கோத்ரா சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீவைப்பு வழக்கில் சிறப்பு விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 31 பேர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

எம்பிஏ, எம்சிஏ வகுப்பில் சேர 28ல் நுழைவுத்தேர்வு துவக்கம்


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ படிப்பில் சேர வரும் 28ம் தேதி முதல் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 99 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

ஐஐடி, ஐஐஎம் பேராசிரியர்கள் உலகத் தரத்தில் இல்லை: ஜெய்ராம் ரமேஷ்


இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிலையங்களின் பேராசிரியர்கள் உலகத் தரத்தில் இல்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.

சமச்சீர் கல்வி இல்லை ; பள்ளி திறப்பு தள்ளிப்போகிறது; தமிழக அமைச்சரவையில் அதிரடி முடிவு



இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் , இது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கவும் முதல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா உள்பட 15 நாடுகள் தேர்வு


ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேசியத் தலைவரின் புதிய தம்பிகள்



தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிராபாகரன் அவர்கள் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு செய்த துரோகங்கள் இன்னும் ஆறாத ரணமாய் இருக்கிறது.