islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஐஐடி, ஐஐஎம் பேராசிரியர்கள் உலகத் தரத்தில் இல்லை: ஜெய்ராம் ரமேஷ்


இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிலையங்களின் பேராசிரியர்கள் உலகத் தரத்தில் இல்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.

தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்தை அவர் தெரிவித்தார்.

ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

நமது ஐஐடி.,களில் உருப்படியான ஆராய்ச்சி எதுவும் நடைபெறுவதில்லை. ஐஐடி.,களில் பணியாற்றும் பேராசிரியர்கள் உலகத் தரத்தில் இல்லை. அங்கு பயிலும் மாணவர்கள் தான் உலகத் தரத்துடன் உள்ளனர். எனவே, ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிலையங்களின் சிறப்புக்கு மாணவர்கள் தான் காரணம். அதன் பேராசிரியர்களோ அல்லது ஆராய்ச்சியோ அல்ல.

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு இணைந்து, கடல் உயிரியல் தேசிய மையம் உருவாக்கப்படவுள்ளது. உலகத் தரத்திலான ஆராய்ச்சி மையத்தை அரசின் கட்டமைப்பில் மட்டுமே உருவாக்குவது சிரமம் என்பதாலும், மாணவர்களின் முழு வரவேற்பை பெறும் வகையிலும் தனியார் பங்களிப்புடன் அந்த மையம் தொடங்கப்படுகிறது.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரான அவரும் ஐஐடி.,யின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1975-ல் மும்பை ஐஐடி.,யில் ஜெய்ராம் ரமேஷ் பி.டெக் பட்டம் பெற்றவர்.

No comments:

Post a Comment