islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

எம்பிஏ, எம்சிஏ வகுப்பில் சேர 28ல் நுழைவுத்தேர்வு துவக்கம்


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ படிப்பில் சேர வரும் 28ம் தேதி முதல் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 99 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.


தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வின்(டான்செட்) கீழ் கவுன்சலிங் மூலம் அண்ணா பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்சிஏ., எம்பிஏ., எம்.இ., மற்றும் எம்.டெக்., சேர்க்கை நடைபெறுகிறது. இதன் கீழ் சுமார் 200 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வருகின்றன. டான்செட் மூலம் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் நிரப்பப்படுகின்றன.

இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் இறுதிவரை மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் 99 ஆயிரம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வில் கணிதம், ரீசனிங், ஆங்கிலம், டேட்டா இன்டர்ப்ரேட்டசன் போன்ற பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு மதிப்பெண். தவறான பதிலுக்கு 0.25 மதிப்பெண் கழிக்கப்படும். இதில் 40 மதிப்பெண்கள் எடுத்தாலே சிறந்த கல்லூரிகளில் சேரலாம்.

இந்தாண்டு எம்பிஏ., க்கான நுழைவுத் தேர்வு வரும் 28 காலை 10 மணிக்கும் எம்சிஏ.,விற்கு மதியம் 2.30 மணிக்கும் நடைபெறுகிறது. மே 29ல் எம்.இ., மற்றும் எம்.டெக்., தேர்வுகள் காலையில் நடைபெறும். ஜூன் 3ம் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறுகையில் ‘இந்தாண்டு அதிகளவிலான மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

அதனால் மேற்படிப்பிற்கான டான்செட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இன்ஜினியரிங் கவுன்சலிங்கை போல் டான்செட்டிலும் காலியிடங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இளங்கலை படிக்கும் போதே நன்றாக படித்தால் டான்செட்டில் அதிக மதிப்பெண் பெறமுடியும்’ என்றார்.

No comments:

Post a Comment