islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பயங்கரவாதிகள் பட்டியலை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது.




இந்தியாவில் தேடப்பட்டு வரும் முக்கியமான பயங்கரவாதிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்த பயங்கரவாதிகள் பட்டியலை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது.

பயங்கரவாதிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் இந்தியா நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால் அவர்கள் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் மறுத்து வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இரு நாடுகளுக்கு இடையேயான உள்துறை செயலாளர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் 50 பேரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா பட்டியல் ஒன்றை பாகிஸ்தானிடம் அளித்தது. இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த 2 பேர் இந்தியாவில் இருந்தது தெரியவந்தது. அவர்களில் ஓருவர் தானேவில் ஜாமீனிலும், மற்றொருவர் மும்பை சிறையிலும் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்தியா அளித்த பட்டியலை பாகிஸ்தான் நிராகரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தியா அளித்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் இந்தியாவில் உள்ளனரா என்பதை இந்தியா தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். பட்டியலில் இடடம்பெற்றுள்வர்களில் 2 பேர் அங்கு உள்ளனர் என கூறியுள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கடிதத்தை ஆராய்ந்த பின்னர், கடிதத்தை இந்தியாவிடம் திருப்பி அனுப்ப கோரி பாகிஸ்தான் வெளியுளவுத்துறை அமைச்சகத்துக்கு அக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதம் விரைவில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதரிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அளித்துள்ள பட்டியலில் முக்கியமானவர்கள், தாவூத் இப்ராகிம், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்க தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்களின் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடிதத்தில் தவறு இருந்ததை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஒத்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனால் பட்டியலை திரும்ப பெறப்போவதில்லை எனவும் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment