islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

நாக்கை அறுத்துக் கொண்டவருக்கு அரசுப் பணி


தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றால் தனது நாக்கை அறுத்துக்கொள்வதாக வேண்டிக்கொண்டு அந்த பிரார்த்தனையை நிறைவேற்றிய ஒரு பெண்மணிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா மதிய உணவுத்திட்ட உதவியாளராக நியமித்திருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கே சரிதா என்பவர் அதிமுக தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் திருக்கோயிலில் தனது நாக்கை வெட்டி காணிக்கை செலுத்தியதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இரு குழந்தைகளுக்கு தாயான சரிதா கணவனால் கைவிடப்பட்டவர். தற்போது சிகிச்சை முடிந்துவிட்ட நிலையில் சரிதாவுக்கு சத்துணவு உதவியாளர் பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்கியுள்ளார். சரிதாவின் மாத ஊதியம் 2077 ரூபாயாக இருக்கும் என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒரு கட்சி சார்பாக ஒரு செயலை செய்ததற்குப் பரிசாக, மக்கள் வரிப்பணத்தில் அரசு பதவி வழங்கப்படுவது தவறானது.மக்களிடம் இது போன்ற மூட செயல்களை,முட்டாள்தனமான செயல்களை செய்வதற்க்கு வழி வகுக்குமென்பதை முதல்வர் உணரவேண்டும்.

இது போன்ற அறிவுக்கு புறம்பான செயல்களை மற்றவர்கள் செய்ய அரசின் நடவடிக்கை வழிவகுக்கும்.

அதே நேரம் நாக்கை அறுத்துக் கொள்வது போன்ற செயல்களை முதல்வர் ஏற்கிறாரா என்பது குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் ஏதும் கூறப்பட்டிருக்கவில்லை.

No comments:

Post a Comment