islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

கோத்ரா:குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மேல் முறையீடு


கோத்ரா சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீவைப்பு வழக்கில் சிறப்பு விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 31 பேர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

மரணத்தண்டனை விதிக்கப்பட்ட ஹாஜி பிலால், முஹம்மது கர்கர், பின்யாமின் பெஹ்ரா, ஹஸன் சார்க்கா, யூசுஃப் ஸர்தா, மெஹபூப் அஹ்மத் ஆகியோரும், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டோரும் மேல் முறையீடு செய்துள்ளனர். கோடைக்கால விடுமுறை முடிந்த பிறகு உயர்நீதிமன்றம் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெ.எம்.பன்சால் தெரிவித்துள்ளார்.

2011 மார்ச் மாதம் 1-ஆம் தேதி சிறப்பு விசாரணை நீதிமன்றம் தண்டனையை அறிவித்தது. 2002-இல் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தின் பழியை முஸ்லிம்களின் மேல் சுமத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொடூரமாக கொலைச்செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment