islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

நாமக்கல்-மின்சார ஸ்கூட்டர், தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்


மின்சார ஸ்கூட்டர் மற்றும் தையல் இயந்திரங்களை இலவசமாகப் பெற தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சோ.மதுமதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

நாமக்கல் மாவட்டத்துக்கு தலா ரூ.25,000 மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கான 25 மின்சார ஸ்கூட்டர்களும், தலா ரூ.5500 மதிப்புள்ள மோட்டார் பொருத்திய 28 தையல் இயந்திரங்களும் ஒதுக்கீடாக பெறப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகளுக்கான மின்சார ஸ்கூட்டரை பெற, 18 வயது நிரம்பிய இரண்டு கால்களும் பாதிக்கபட்டு, இரண்டு கைகளும் நன்கு செயல்படக் கூடிய கல்வி பயிலும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.

மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 6 மாதகால தையல் பயிற்சி சான்று பெற்ற 18 முதல் 45 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள், தங்களுடைய அடையாள அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், புகைப்படங்கள் 2, கல்வி பயிலுபவர் எனில் அந்த நிறுவனத்தில் பெற்ற கல்விச் சான்று, பணிபுரிபவர் எனில் அந்த நிறுவனத்தில் பெற்ற பணிச்சான்று, தையல் இயந்திரம் பெற விரும்புவோர் அதற்கான பயிற்சி சான்று ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மே 30-ம் தேதி காலை 10 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். தொடர்புக்கு 04286-280019.

No comments:

Post a Comment