islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

குஜராத் இனப்படுகொலை:உண்மையை மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் அமீத் ஷா முயன்றார்-சஞ்சீவ் பட்



கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நரந்திரமோடி கூட்டிய உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்ற விபரத்தை சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி)முன்பாக ஆஜராகி வெளியிடுவதை தடுக்க குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷா முயன்றார் என மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.


2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை விசாரித்துவரும் நானாவதி கமிஷன் முன்பாக இதனை பட் தெரிவித்தார். முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கவும், ஹிந்துக்களை அவர்களின் கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்கவும் மோடி உத்தரவிட்ட உயர்மட்ட கூட்டத்தில் தான் பங்கேற்றதாக கடந்த மாதம் சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.

இரண்டு உறுப்பினர்களை கொண்ட நானாவதி கமிஷன் சஞ்சீவ் பட்டிடம் குறுக்கு விசாரணையை நடத்தியது.எஸ்.ஐ.டி முன்பாக ஆஜராவதற்கு முன்பு குஜராத் அரசில் எவரேனும் உங்களை அணுகினார்களா? என்ற கேள்விக்கு சஞ்சீவ் பட் பதிலளிக்கையில், தன்னை அமீத் ஷா அணுகி மோடி நடத்திய கூட்டத்தின் விபரங்களை வெளியிடக்கூடாது என தடுக்க முயன்றதாக தெரிவித்தார்.ஆனால், வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடப்பதால் அதன் விபரங்கள் வெளியிட இயலாது என சஞ்சீவ் பட் தெரிவித்தார்.

சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் படுகொலை வழக்கில் சி.பி.ஐ கைது செய்த அமீத் ஷாவுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ஜாமீன் அனுமதித்தது.ஆனால், ஷாவிடம் குஜராத்திற்கு வெளியே செல்லக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, நரந்திர மோடி நடத்திய உயர்மட்ட கூட்டத்தில் சஞ்சீவ் பட் பங்கேற்றார் என பத்திரிகையாளரான சுப்ரான்ஷு சவ்தரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.கூட்டம் நடந்த அன்று காலையில் தான் சஞ்சீவ் பட்டை சந்தித்ததாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ள மோடியின் வீட்டிற்கு போவதாக தன்னிடம் பட் கூறியதாகவும் சவ்தரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment