சேலம் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் மே 30-ம் தேதி நடைபெறும் என்று சேலம் மாநகர கமிஷனர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.
÷இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
÷சேலம் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2000 முதல் 2008-ம் ஆண்டு வரை அரசு, தனியார் மருத்துவமனைகள், வீடுகளில் பிறந்த குழந்தைகளுக்கான பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்கள் இந்த சிறப்பு முகாமில் வழங்கப்படும்.
÷மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாமில் பதிவு செய்பவர்களுக்கு ஒரு பிறப்புச் சான்றிதழ் நகல் இலவசமாக வழங்கப்படும். ஏற்கனவே பெயர் இல்லாமல் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் நேரில் வந்து விண்ணப்பித்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
÷சான்றிதழ் பெற விண்ணப்பிப்பவர்கள் இருப்பிட முகவரி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளிச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தைக் கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும்.
÷பெயர் இல்லாமல் சான்றிதழ் பெற்றிருந்தால் அதன் நகலுடன் வர வேண்டும். குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய வருபவர்கள் பள்ளிச் சான்றிதழ் அல்லது உரிய ஆவணங்களைக் கொண்டுவர வேண்டும்.
÷பெற்றோர் மட்டுமே முகாமில் பங்கேற்க முடியும். அதற்காக ஏதேனும் ஒரு ஆவணத்தைக் கொண்டு வர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
÷தவறான தகவலால் குழப்பம்: இந்நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான முகாம் திங்கள்கிழமை நடப்பதாகப் பரவிய தவறான தகவலால் ஏராளமான பொதுமக்கள் அலுவலகத்தில் குவிந்தனர். வந்திருந்தவர்களுக்கு மாலை வரை பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment