islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் சடங்குகள்!!




நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!

நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!
புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.

மேற்கு வங்காள சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


மேற்கு வங்காள மாநில சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 59 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றி சதவீதம் 20 ஆகும். ஆனால், மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம் மக்கள் தொகையை விட இது குறைவாகும்.

ஊழலுக்கு மரண அடி...



இந்தியாவில் இயங்கும் மக்களாட்சியின் வலிமையை சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றன. தங்களுக்கு விருப்பமில்லாத ஆட்சிகளை மக்கள் அகற்றியிருக்கிறார்கள். நன்மை செய்தவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள்.

தி.மு.கவுக்கு ஓய்வு


தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கருத்துக் கணிப்புகளையும் மீறி தி.மு.க மோசமான தோல்வியை இத்தேர்தலில் சந்தித்துள்ளது. தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கூறியது போல் மக்கள் தி.மு.கவுக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 69 பேர் பலி



வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள துணை நிலை ராணுவ பயிற்சி மையத்தில் இன்று பயங்கர குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 69 பேர் இறந்தனர் என பொலிசார் தெரிவித்தனர்.

தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதிப்பு இல்லை: ஜெயப்பிரகாஷ் காந்தி


தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதிப்பு இருக்காது. எனவே மாணவர்கள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. பிரிவுகளுக்கே முன்னுரிமை தரலாம் என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.

எம்.பி.பி.எஸ்.: பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு உண்டா?



தமிழகத்தில் அதிக கட்-ஆஃப் மதிப்பெண் காரணமாக இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பழைய பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

காஞ்சி சங்கராச்சாரியாரின் கபடவேடம்:பாப்ரி மஸ்ஜித் நில விவகாரத்தில் தீர்வு காணப்போகிறாராம்


சேலத்தில் உள்ள சங்கரமடத்திற்கு பக்தர்களுக்கு ஆசி(?) வழங்கவந்த சங்கரராமன் கொலை புகழ் சங்கராச்சாரி, பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது என நிருபர்களிடம் பேட்டியளித்துள்ளார். சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கியதால் வண்டவாளங்கள் எல்லாம் வெளியாகி சீரழிந்தவர் தாம் சங்கராச்சாரி.

உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவு குப்பையில் : ஐ.நா. உணவு நிறுவனம்


வருடம் தோறும் உணவு உற்பத்தியில் 1.3 பில்லியன் டன் உணவு பொருட்கள் வீணாவதாக ஐ.நா.,வீன் உணவு மற்றும் விவசாய அமைப்பு(FAO) கூறியுள்ளது.தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்த அளவே கிடைத்து வரும் இயற்கை வளங்களே உள்ளதால், உணவு வீணாவதை குறைக்க வேண்டும்.

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2011


அண்மையில் மார்ச் 31-ஆம் தேதி அன்று 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் தற்காலிக அறிக்கை வெளியிடப்பட்டது. அவை நாளிதழ்களில் சிறிய அளவிலான செய்திகளுடன் வெளிவந்தன. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை விரிவாக வாசகர்களுக்கு தரவேண்டுமென எண்ணினோம். அதன்படி 2011 கணக்கெடுப்பை முழுமையாக ஆய்வு செய்து இக்கட்டுரையில் வெளியிட்டுள்ளோம்.

ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்



சீனாவின் தென்மேற்குப் பகுதியில் ஒரு விவசாயத் தம்பதியினருக்கு இரு குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளன.

பி.இ. கட்-ஆஃப்: 2 மதிப்பெண் அதிகரிக்கும்


இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.5 முதல் 2 மதிப்பெண் வரை அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.

சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கட்-ஆஃப் என்ன?



தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடமாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாணர்களிடையே எழுந்துள்ளது.

உலகின் நம்பர் 1 பயங்கரவாதி!



இந்த பயங்கரவாதியை நீங்கள் லேசில் எடை போட்டு விடலாகாது. உலகின் அத்துனை கண்டங்களிலும் அதன் சகல மூலைகளிலும் இந்த பயங்கரவாதி கால் வைத்த இடத்திலெல்லாம் சர்வநாசத்தை விளைந்துள்ளான்.

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு 5 (அரபியர்களின் சமய நெறிகள்)



நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம் முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனால் அங்கீகக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர்.

ஜூன் 5ல் ஜிப்மர் நுழைவுத் தேர்வு: 37,731 பேர் எழுதுகின்றனர்


ஜிப்மர் பொது நுழைவுத்தேர்வு, ஜூன் 5ல் நடக்கிறது. இத்தேர்வை, நாடு முழுவதும், 12 மையங்களில் இருந்து, 37 ஆயிரத்து, 731 பேர் எழுதுகின்றனர்.

25ஆ‌ம் தே‌தி ‌பிள‌ஸ் 2 ம‌தி‌ப்பெ‌ண் சா‌ன்‌றித‌ழ்க‌ள்


பிள‌ஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் வரு‌ம் 25ஆ‌ம் தேதி அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்படும் எ‌ன்று‌ம் தனிதேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலிருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எ‌ன்று‌ம் அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு கடும் போட்டி!!!

பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் கடும் போட்டி:




தமிழகத்தில் இந்த ஆண்டு பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது.  பிளஸ் 2 தேர்வு முடிவில் பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய முக்கியப் பாடங்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 மதிப்பெண்ணை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாக 120 மாணவர்கள் பெற்றுள்ளனர். பி.இ. படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பொருத்தவரை, 200-ல் தொடங்கி, ஒவ்வொரு கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் இடையே 1,000 மாணவர்களுக்கு மேல் உள்ளனர். அதாவது, 200-க்கும் 199 கட்-ஆஃப் மதிப்பெண் வாங்கியுள்ள மாணவர்களைக் காட்டிலும் அதிகமாக 1,174 மாணவர்கள் கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர்; கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 199-ஐக் காட்டிலும் இந்த ஆண்டு ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 565 அதிகம்.  ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 198-ஐ இந்த ஆண்டு 2,717 மாணவர்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 1,000-த்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆண்டு பி.இ. படிப்புக்கு உரிய ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 198-ஐப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  சிறந்த கல்லூரிகளில்... பி.இ. படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளதால், அண்ணா பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரி உள்பட சிறந்த கல்லூரிகளில் மிக அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களுக்கே விரும்பிய பொறியியல் படிப்புப் பிரிவு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

“அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு விநோதமானது. அதனை நடைமுறைப்படுத்த அனுமதிக்க முடியாது”-உச்ச நீதிமன்ற நீதிபதிகள்


அயோத்தி சிக்கல் குறித்து தொடரப்பட்ட வழக்கில் எந்த ஒரு தரப்பும் கோராத ஒரு தீர்வை அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பாக எப்படி அளித்தது என்று புரியவில்லை என்று அத்தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டை விசாரிக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் வியப்புத் தெரிவித்துள்ளது.

குழந்தைகளும் இ‌‌ன்டர்நெட்டும்


குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது.

கடல் நீ்ர் மட்டம் உயருவதால் உலகின் முக்கிய நகரங்கள் மூழ்கி விடும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)




ஆர்டிக் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் ஏற்பட்டுள்ள தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் அதிகமாக உருகி ஏராளமான அளவில் நீர் வெளியேறி வருகிறது.

கவுரவ கொலையாளிகளுக்கு மரணத்தண்டனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு


கவுரவ கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை வழங்க வேண்டும் என்று நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலைக்காட்டின் அதிசயப் பறவை!


நீங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை வழியாகப் பயணம் செய்யும் போது பார்க்கக்கூடிய அரிய பறவைகள் இருவாச்சிப்பறவைகள். இவை அளவில் சற்று பெரிதானவை. பறக்கும்போது ஒரு ஹெலிகாப்டர் பறப்பதைப் போல இருக்கும். அதே போல ஒலி எழுப்பக்கூடியவை. ஆங்கிலத்தில் ஹார்ன்பில் என்று அழைக்கப்படுகிறது. பெரிய அலகை உடையது. அலகுக்கு மேலே காஸ்க் எனப்படும் கொண்டை போன்ற அமைப்பு இருக்கும். இது பறவைக்கு இருவாய்கள் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தரும்.

ஒசாமா பின்லேடன் கொலை செய்யப்பட்டது தொடர்பில் முழு விபரங்களும் தேவை - ஐ.நா


அமெரிக்க உளவுப்படையினரின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழுமையான சகல விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவநீதம் பிள்ளை கேட்டுள்ளார்.

வானில் தோன்றிய ஒளிக்கற்றை: வியப்பில் ஆழ்ந்த மக்கள் (வீடியோ இணைப்பு)


ரஷ்யாவில் இரவு நேரத்தில் வானில் ஒரு பிரகாச ஒளி தோன்றியது. அதைப் பார்த்த மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

எகிப்தில் மதக் கலவரம்: 190 பேர் கைது



எகிப்தில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவையும் சீனாவையும் தொழில்நுட்பத்தில் வளர விடக்கூடாது - ஒபாமா!


"இந்தியா மற்றும் சீனாவிலிருந்து புதிய தொழில் நுட்பங்கள் வருவதையும் அதில் அவர்கள் வளருவதையும் நாம் அனுமதிக்கக் கூடாது" என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்கர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றதுமுதல் அவரது நடவடிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களாக இந்தியர்கள் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மதகுருக்களுக்கு தடை விதித்த பைலட்


அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் என்ற நகரத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் அரபி மொழி ஆசிரியராக வேலை பார்ப்பவர் மசூதுர் ரஹ்மான். இவரும் இவரது மற்றொரு முஸ்லிம் மதகுரு நண்பரும் கரோலினா
என்ற இடத்திற்கு செல்வதற்காக அட்லாண்டிக் சவுத்ஈஸ்ட் ஏர்லைன்ஸ் என்ற விமானத்தில் டிக்கெட் வாங்கியிருந்தனர்.

இந்தியா:இணையதளங்கள், வலைப்பூக்களுக்கு இனி கடுமையான கட்டுப்பாடுகள்


இணையதள பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்த மத்திய அரசின் முயற்சிகள் முடிவடையும் தருவாயை எட்டியுள்ளது. இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆக்டில் உட்படுத்தி நடைமுறை படுத்தவிருக்கும் இணையதள கட்டுப்பாட்டிற்கான வரைவு மசோதா தயாராகிவிட்டது.

பின்லேடனுக்கு துரோகம் இழைத்து விட்டார் அல் ஜவாஹிரி-சவூதி நாளிதழ்


அல் கொய்தா அமைப்பை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக, பின்லேடனின் பாதுகாப்பை சீர்குலைத்து அவருக்கு துரோகம் இழைத்து கடைசியில் அவரது மரணத்திற்கும் வித்திட்டு விட்டார் அல் ஜவாஹிரி என்று சவூதி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை


அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.

கணணி பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற


உங்களுக்கு உங்கள் கணணி உதிரிபாகங்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது. சிலருக்கு தெரிந்திருக்கலாம். பலருக்கு தெரியாதிருக்கலாம்.

கூகுள் தேடியந்திரத்தின் பயனுள்ள புதிய வசதி



இணையத்தில் கொட்டிகிடக்கும் கோடி தகவல்களில் நமக்கு தேவையானதை நொடிபொழுதில் தேடி நமக்கு கொடுக்கும் மிக சிறந்த பணியை தேடியந்திரங்கள் (search engine)செய்கிறது.