islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2011


அண்மையில் மார்ச் 31-ஆம் தேதி அன்று 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் தற்காலிக அறிக்கை வெளியிடப்பட்டது. அவை நாளிதழ்களில் சிறிய அளவிலான செய்திகளுடன் வெளிவந்தன. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை விரிவாக வாசகர்களுக்கு தரவேண்டுமென எண்ணினோம். அதன்படி 2011 கணக்கெடுப்பை முழுமையாக ஆய்வு செய்து இக்கட்டுரையில் வெளியிட்டுள்ளோம்.


மக்கள்தொகை என்பது

"மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு முதல்தர புள்ளிவிவர ஆதாராமாகும். இது குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை பற்றியது மட்டுமல்லாமல், வீடற்ற மக்கள் மற்றும் நாடோடிகளையும் உள்ளடக்கியதாகும். மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரமானது மக்கள் மற்றும் வீடுகளில் குடியிருப்போர் தகவல்களை அலசி ஆய்வு செய்வதாக இருக்கவேண்டும். முழுமையான, தனிநபரின் சிறிய பகுதி, நகரங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்'’’ என ஐ.நா.சபையின் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான வழிகாட்டுதல் மற்றும் கோட்பாடுகள்-2008 குறிப்பிட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலின்படிதான் உலக நாடுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திவருகின்றன.

மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது மக்கள் பற்றிய புள்ளிவிவரங்களை சேகரிப்பது, தொகுப்பது, மதிப்பிடுவது, அலசுவது மற்றும் வெளியிடுவது போன்ற மொத்தமான செயல்பாட்டினை குறிக்கின்றது. வேறுவிதமாக கூற வேண்டுமானால் இந்த கணக்கீடு நாட்டின் பொருளாதாரம், மக்கள் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றையும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாட்டில் வாழும் அனைத்து மனிதர்களை பற்றிய விவரங்களையும் தொகுப்பதாகும். ஒரு நாட்டில் மக்கள்தொகையானது பொருள் உற்பத்தி மற்றும் பகிர்வுக்கு அடிப்படையாக உள்ளது. மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் பொருளாதாரத்தில் திட்டமிடவும் செயல்படுத்தவும், சமூக முன்னேற்றம், நிர்வாக செயல்பாடு, அறிவியல் ஆராய்ச்சி போன்றவற்றிற்கு தேவைபடுவதாக உள்ளது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம், சமூக பாதுகாப்பு, மனிதவள வளர்ச்சி ஆகியவற்றை அறிந்துக்கொள்ளலாம்.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பது வரையாறையாக பின்பற்றப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மக்கள்தொகை மற்றும் குடியிருப்புகள் குறித்த கணக்கெடுப்புகள் தனித்துவ கணக்கெடுப்பாக, வரையறுக்கப்பட்ட பகுதியில் அனைவருக்கும் பொதுவானதாக, ஒரே நேரத்தில் மற்றும் வரையறுக்கப்பட்ட கால இடைவெளியில் இருக்க வேண்டும். மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட வேண்டும்' என பரிந்துரைக்கிறது.

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அன்றும் இன்றும்

மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையானது ஒரு மிக சிறந்த ஜனநாயக நடவடிக்கையாகும். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்று. இருப்பினும், மக்கள்தொகை பற்றிய தகவல்கள் இந்தியாவில் முதன்முதல் வெளியிடப்பட்டது மொகலாயர் காலத்தில்தான். அக்பர் அரசவையில் இருந்த அபுல்பாசல் எழுதிய அயனி அக்பரி (கி.மு. 1595-1596) என்ற நூலில் அன்றைய மக்கள் தொகை பற்றிய தகவல்கள் தந்துள்ளார். பின்னர் ஆங்கில ஆட்சியின்போது மெட்ராஸ் மாகாணத்தில் 1687-இல் ஆளுநராக இருந்த எலிகு ஏல் என்பவர் இங்கிலாந்து மன்னரின் ஆணைக்கிணங்க அன்றைக்கு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் வசித்தவர்களின் விவரங்களை திரட்டி தந்தார். அதற்கு பின்னர் குறிப்பிடும்படி எந்தவித கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. 1853 ஆண்டு வடமேற்கு பகுதியில் சிறிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1871-இல் இதோ போல சிறிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அக்கணக்கெடுப்பை நடத்தியவர் கிறிஸ்டோப் குலிமிட்டோ. இதனை பற்றி கிறிஸ்டோப் குலிமிட்டோ“ ""1871-ஆம் ஆண்டு இந்திய புள்ளியல் வரலாற்றில் திருப்புமுனையான ஆண்டாகும். அந்த ஆண்டில்தான் பஞ்சங்கள் மற்றும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன'' என்றார். இருப்பினும் அது முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பாக இருக்கவில்லை. வெறும் மக்களின் தலைகளை எண்ணப்பட்டதாக இருந்தது. அதற்கடுத்து 1871-இல் மதராஸ் மாகாணத்தில் மக்கள்தொகை கணகெடுப்பு தலைமை அதிகாரியாக இருந்த டாக்டர் ஜ்.ழ். கரோனிஸ் “ ""மதராஸ் மாகாணத்தில் 1872-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நேரடி மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கும், 1867- இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பிற்கும் இடையிலான வித்தியாசம் அதிகளவில் உள்ளது. இதனால் உண்மையான மக்கள்தொகை எவ்வளவு என்பதில் திருப்திகரமான முடிவுக்கு வர முடியவில்லை''’’ என்றார். பின்னர்தான் முறையான மற்றும் நவீன மக்கள் தொகை கணக்கெடுப்பானது 1865 மற்றும் 1872 ஆண்டுகளுக்கு இடையே நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளில் நடத்தப்பட்டது. இதனால் 1872-ஆம் ஆண்டு மக்கள்தொகையே முதன் முதலில் நடத்தப்பட்ட முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு என்று அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்த முதல் கணக்கெடுப்பு 1881-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அப்போதுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அப்போதைய மக்கள்தொகை ஆணையர் ஜ்.ஜ்.புளோடேன். இதன் தொடர்ச்சியாகதான் உலக அளவில் சிறந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு தற்போதுவரை இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பனது 1872 வது கணக்கெடுப்பு தொடர்ச்சியின் அடிப்படையில் 15 -வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். அதுபோல இந்திய விடுதலைக்கு பிறகு எடுக்கப்பட்ட 7- வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய கணக்கெடுப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள்தொகை ஆணையம்

இந்தியாவில் மக்கள் கணக்கெடுப்பு ஆணையம் மத்திய பட்டியலில் ( சட்டப்பிரிவு 246) அடங்கியுள்ளது. அதன்படி இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் 69 வது தொடர்வரிசையில் கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் 194-இல் இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பை சுதந்திரமாக நடத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளட்டுள்ளது. இப்பணியை 1948ஆம் ஆண்டு இந்திய கணக்கெடுப்பு சட்டத்தின் (1948 ஈங்ய்ள்ன்ள் ர்ச் ஒய்க்ண்ஹ ஆஸ்ரீற்) கீழ் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் மேற்கொள்கிறது. இந்தச் சட்டத்தின்படி கணக்கெடுப்பு நாட்களை முடிவு செய்யவும் கணக்கெடுக்கும் பணிக்கு எந்த குடிமகனையும் அழைக்கவும் அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பிற்கு தேவைப்படும் தகவல்களை பிழையின்றி அளிப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிழையான தகவல்களைக் கொடுப்பதற்கும் தகவல்களை மறுப்பதற்கும் தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றுமொரு சிறப்பங்கமாக இச்சட்டத்தில், தனிநபர் தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கணக்கெடுப்புத் தகவல்கள் மீளாய்விற்கோ நீதிமன்ற சாட்சியத்திற்கோ தரப்படமாட்டாது.

மக்கள்தொகை ஆணையம் இந்திய பொது பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் (Registrar General and Census Commissiner of India) தலைமையில் அமைக்கப்படுள்ளது. இந்த அலுவலகம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்துடன் இணைந்துள்ளது. இறப்பு மற்றும் பிறப்பு பதிவுச்சட்டம்- 1969 படி, மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முறையாக பதிவு செய்யப்படுகிறது.

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல்கட்டத்தில் இல்லங்களும் வீட்டெண்களும் பட்டியலிடப்படுகின்றன; இரண்டாம் கட்டத்தில் தனிநபர் தகவல்கள் பதியப்படுகின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பில் 2010 ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 15 வரை முதற்கட்ட கணக்கெடுப்பு நடந்தது. இரண்டாம் கட்டப் பணி 2010 பிப்ரவரி 9 தேதி முதல் பிப்ரவரி 28 வரை நடைபெற்றது. தற்போதைய 2011 கணக்கெடுப்பில் தனிநபர் விபரம், குடும்ப தலைவருக்கு உறவு முறை, இனம், பிறந்த தேதி, வயது, திருமண நிலை, மதம், எஸ்.சி.,/எஸ்.டி., மாற்றுத்திறன், தாய்மொழி, அறிந்த பிற மொழிகள், எழுத்தறிவு, கல்விநிலையம் செல்லும் நிலை, அதிகபட்ச கல்வி, வேலை, தொழில், பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், இடம்பெயர்ச்சிக்கான காரணம், கிராம/நகரில் தங்கிய விபரம், பிறந்த மொத்த குழந்தைகள், உயிருடன் வாழும் குழந்தைகள், கடந்த ஓராண்டில் பிறந்த குழந்தை போன்ற 29 கேள்விகளுக்கு பதில் சேகரிக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் தற்போது தொகுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சி பகுதிகள் ஆகியவற்றின் மொத்த மக்கள்தொகை, எழுத்தறிவு, பாலினம், அடர்த்தி, குழந்தைகள் மக்கள்தொகை விவரம் போன்றவைகள் தொகுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

மக்கள்தொகை அளவு

குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்களின் மொத்த எண்ணிக்கை அந்த நாட்டின் மக்கள் தொகை ஆகும். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 படி, அதாவது 2011 மார்ச் 1- ஆம் தேதி 0:00 மணி நேரத்தில் இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 1,210,193,422 (1,210 மில்லியன்) அதாவது 121 கோடி ஆகும். இது 2001 ஆண்டு கணக்கெடுப்பில் 1,028, 737, 436 ஆக இருந்தது. 2001 - 2011 பத்தாண்டுகளின் இடையே 181 மில்லியன் (18 கோடி) அதிகரித்துள்ளது. இதன்படி உலக மக்கள்தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது (முதலிடம் சீனா 1,341 மில்லியன்). இந்தியாவின் இந்த மொத்த மக்கள்தொகையானது அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்காளதேசம், ஜப்பான், ஆகிய நாடுகளின் மொத்த மக்கள்தொகைக்கு சமம்.

உலக மக்கள்தொகை 1-7-2010 கணக்கெடுப்பின்படி ( ஐ.நா. சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்தின் மக்கள்தொகை பிரிவு அளித்த விவரம்) 6908. 7 மில்லியன் ஆகும். தற்போது உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட மூன்று நாடுகள் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகும். அந்தவகையில் உலகின் பத்து நபர்களின் நான்கு பேர் மேற்கண்ட நாடுகளை சேர்ந்தவர்கள்.

2011 மக்கள்தொகைபடி, இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் உத்திர பிரதேசமாகும். இதன் மொத்த மக்கள்தொகை 199. 6 மில்லியன் (19. 90 கோடி). இது உலகின் ஐந்தாவது மக்கள்தொகை கொண்ட நாடான பிரேசிலைவிட அதிகம். இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது மாநிலம் மஹாராஸ்டிரா. இதன் மக்கள்தொகை 112. 4 மில்லியன். உத்திரப்பிரதேசம், மகாராஸ்டிரா மாநிலங்களின் மக்கள்தொகையானது 312 மில்லியன் ஆகும். இவை உலக மக்கள்தொகையில் மூன்றாவது இடத்தை வகிக்கும் அமெரிக்க நாட்டைவிட (308. 7 மில்லியன்) அதிகம்.

இந்த கணக்கெடுப்பை பார்க்கும்போது மக்கள்தொகை வளர்ச்சிவீதம் தொடர்ந்து குறைந்து வருகின்றது. ஆனால் மொத்த மக்கள்தொகையின் அளவு அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்கள் மக்கள்தொகை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், தென்னிந்தியாவில் மக்கள்தொகை அதிகரிப்பு வளர்ச்சியானது குறைந்து வருகின்றன. இதற்கு எதிர்மாறாக வட இந்தியா மாநிலங்களில் மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அந்த மாநிலங்களில் மக்கள்தொகை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கைத்தரம் குறைந்து வருவதையும் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. சமீப காலங்களில் வடஇந்திய மக்கள் அதிகளவில் வேலைவாய்ப்புகளுக்காக தென்னிந்திய மாநிலங்களில் படையெடுத்து வருகின்றனர். அப்படி வருபவர்கள் 90 சதவீதம் ஏழை உழைப்பாளிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட ஐந்து மாநிலங்கள் வரிசைப்படி,

* உத்திரபிரதேசம் - 199,581,477, 2. மகாராஷ்டிரா - 112,372,972, 3. பீகார் - 103,804,637, 4. மேற்கு வங்காளம் - 91,347,736, 5. ஆந்திரபிரதேசம் - 84,665,533 ஆகும்.

இந்தியாவில் குறைந்த மக்கள்தொகை கொண்ட ஐந்து மாநிலங்கள் வரிசைப்படி,

* சிக்கிம் - 607,688, 2. மிசோரம் - 1,091,014, 3. அருணாச்சல பிரதேசம் - 1,382,611, 4. நாகாலாந்து - 1,980,602, 5. மணிப்பூர் - 2,271,756 ஆகும்.

அதிக மக்கள்தொகை கொண்ட மூன்று யூனியன் பிரதேசங்கள் வரிசைப்படி,

* டெல்லி- - 16,753,235, 2. புதுச்சேரி - 1,244,464, 3. சண்டிகர் - 1,054,686

குறைந்த மக்கள்தொகை கொண்ட மூன்று யூனியன் பிரதேசங்கள் வரிசைப்படி,

* லட்சத்தீவுகள் - 64,429, 2. டாமன் & டையூ - 242,911, 3. தாத்ரா & நாகர் ஹவேலி - 342,853.

வளர்ச்சி விகிதம்

இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் நாடு விடுதலையிலிருந்து குறைந்து வருகிறது. இதை பத்தாண்டு வளர்ச்சி வீதமாக பார்த்தால், 1981 -1991 -இல் 23.87 சதவீதத்திலிருந்து, 1991 - 2001 இல் 21.54 சதவீதமானது. 2001 - 2011 -இல் 17.64 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் சராசரி வருட வளர்ச்சி வீதம் 1.62% ஆக குறைந்துள்ளது. 2001-இல் சராசரி வருட வளர்ச்சி விகிதம் 1.95 % ஆகும். இது மேலும் அதே நேரத்தில் சராசரி வளர்ச்சி விகிதம், பத்தாண்டு வளர்ச்சி வீதமும் தொடர்ந்து குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் மொத்த மக்கள்தொகை அதிகரித்து கொண்டே போகும்.

இந்திய மக்கள்தொகை இருபதாம் நூற்றாண்டில் 238.4 மில்லியனாக இருந்தது. இது 110 வருடத்திற்குள் நான்கு முறைக்கு மேல் அதிகரித்து 2011 ஆம் ஆண்டில் 1210 மில்லியனாக உள்ளது. இதே மக்கள் தொகை 1901- இல் 238. 3 மில்லியனாக இருந்த போது சராசரியாக ஆண்டுக்கு 0.3 சதவீதம் மக்கள்தொகை வளர்ந்தது. இவை 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி முறையே 1027 மில்லியனாகவும், 1. 97 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன. இந்தியாவில் 2001 - 2011 பத்தாண்டுகளில் அதிக அளவிலான மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் வட மாநிலங்களில்தான் காணப்படுகிறது. குறைந்த வளர்ச்சிவீதம் தென் மாநிலங்களில் நிலவுகிறது. தெற்கில் ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா; வடக்கில் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மாநிலங்கள்; கிழக்கில் மேற்குவங்காளம், ஓடிசா மாநிலங்கள்; மேற்கில் மகாராஸ்டிர மாநிலம் ஆகியவற்றில் மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது 11 முதல் 16 சதவிகிதத்திற்கிடையில் உள்ளது.

சிறிய மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சி பகுதிகளான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையு போன்றவற்றில் அதிக மக்கள்தொகை வளர்ச்சிவீதம் 53% மேல் உள்ளது. அதேசமயம் இலட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், கோவா ஆகியவற்றில் மிக குறைவான வளர்ச்சியே உள்ளது. நாகலாந்து மாநிலம் முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது அதிக வளர்ச்சிவீதம் பெற்றிருந்து, ஆனால் 2001 - 2011 பத்தாண்டு வளர்ச்சிவீதத்தில் எதிர்மறையாக குறைந்துள்ளது.

பாலின விகிதம்

மக்கள்தொகையில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் உள்ளனர் என்பது ஆண் - பெண் விகிதம் அல்லது பாலின விகிதம் ஆகும். பாலின விகிதம் பாலின சமநிலையை அறிய சிறந்த வழிமுறையாகும்.

இந்த பாலின விகிதம் பற்றி ஐநாசபையின் நான்காவது மகளிர் மாநாடான 2005 பெய்ஜிங் மாநாட்டில் “ "ஆண் - பெண் இடியிலான சமநிலை என்பது மனித உரிமைகள் சார்ந்தது. மேலும் சமூகநீதி, அடிப்படை சம உரிமை, முன்னேற்றம் மற்றும் அமைதி ஆகியவை உள்ளடங்கியதாகும்' என தீர்மானத்தை பிரகடனப்படுத்தியது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த இந்திய மக்கள்தொகை 1,21,01,93,422 பேர். இதில் ஆண்கள் 62,37,24,248 பேர். பெண்கள் 58,64,69,174 பேர் ஆவர். இதன்படி இந்தியாவின் பாலின விகிதம் 940 ஆகும். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 933 ஆக இருந்த பாலின விகிதம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நல்ல வளர்ச்சிகள். ஆனால் இது போதுமான வளர்ச்சியில்லை.

2011 உலக மக்கள் பாலின விகிதமானது ஆயிரம் ஆண்களுக்கு 984 பெண்கள் ஆகும். இதில் அமெரிக்கா நாட்டின் பாலினவிகிதம்1025, பிரேசில் 1042, ரஸ்யா 1167, ஜப்பான் 1055 என உயர்ந்துள்ளன. அதே காலக்கட்டத்தில் குறைந்த பாலினவிகிதம் கொண்ட நாடுகளில் சீனா 926, இந்தியா 940, இந்தோனேசியா 988, பாகிஸ்தான் 943, வங்காளதேசம் 978, நைஜீரியா 987 என்ற அளவில் உள்ளன. இதன் மூலம் தெரியவரும் செய்தி என்னவென்றால் அமெரிக்க, ஜப்பான், மேற்கத்திய நாடுகளில் பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளன. அதேசமயம் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பெண்களின் வாழ்க்கைத் தரம் குறைந்துள்ளன.

இந்தியாவைவிட அண்டைய நாடுகளான மியான்மர் (1048 ) , இலங்கை (1034), நேபாளம் (1014) அதிக அளவில் பாலினவிகிதம் கொண்டு சிறப்பாக உள்ளன. இந்த நாடுகளிலும் பெண்கள் முன்னேற்றம் மிகவும் ஆரோக்கியமாகவும் உள்ளன. இந்த நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும் போது இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பூட்டான் போன்ற நாடுகள் ஆணாதிக்கம் அதிகளவில் உள்ளன என்பதை ஐநாசபை மக்கள் தொகை கணக்கீட்டு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் பாலின விகிதம் வரலாற்று காலம் முதல் எதிர்மறையாக அல்லது பெண்களுக்கு விரோதமாகவே உள்ளது. 1901 ஆண்டில் 972 ஆக இருந்த பாலினவிகிதம் 1971 இல் 930 ஆக குறைந்தது இது தற்போது 940 ஆக உள்ளது.

இந்தியாவின் அதிக பாலின விகிதம் (1000 ஆண்களுக்கான பெண்கள்) கொண்ட ஐந்து மாநிலங்கள் வரிசைப்படி,

* கேரளா - 1084, 2. தமிழ்நாடு - 995, 3. ஆந்திரபிரதேசம் - 992, 4. சட்டீஸ்கர் - 991, 5. மணிப்பூர் - 987
இந்தியாவில் குறைந்த பாலின விகிதம் கொண்ட ஐந்து மாநிலங்கள் வரிசைப்படி

* ஹரியானா - 877, 2. ஜம்மு & காஷ்மீர் - 883, 3. சிக்கிம் - 889, 4. பஞ்சாப் - 893, 5. உத்திரபிரதேசம் - 908

மக்கள்தொகை அடர்த்தி

மக்கள்தொகை அடர்த்தி என்பது ஒரு சதுர கிலோ மீட்டருக்குள் வாழும் மக்களின் எண்ணிக்கையாகும். இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்கள் நெருக்கத்தை காட்டும் முக்கியமான குறியீட்டு எண். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 பேர். இது 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 325 பேராக இருந்தது. ஆக மக்கள்தொகை அடர்த்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக புவிபரப்பளவில் இந்தியா 2.4 சதவீதம் கொண்டுள்ளது. இது 135.79 மில்லியன் சதுர கிலோ மீட்டராகும். இந்த பரப்பளவு 17.5 சதவிகித மக்கள் வசிப்பதற்கான இடமாக உள்ளது. இதனை அமெரிக்க நாட்டுடன் ஒப்பிட்டுவோமானால், அமெரிக்கா உலகளவில் 7.2 சதவீதம் நிலப்பரப்பு கொண்டு மக்கள்தொகையில் 4.5 சதவீதம் பெற்றுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் மக்கள் அடர்த்தியை நன்றாக புரிந்துகொள்ளலாம்.

1901 -ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 77 பேர் . இது 1911- இல் 82 பேராகவும், 1951 -இல் 117 பேராகவும், 1981 இல் 216 பேராகவும், தற்போது 382 பேராகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு வேகமாக அதிகரிக்கும் மக்கள்தொகை அடர்த்திக்கு தக்கவாறு, அதிகளவில் அடிப்படை கட்டமைப்பு, வீடு, தண்ணீர், மருத்துவ வசதிகளுக்கு தேவைகள் அதிகரிக்கும். இவை குறையும் நிலை ஏற்பட்டால் வாழ்க்கைத்தரம் மிகவும் குறைந்துவிடும். இந்த நிலையில்தான் இந்தியாவில் அதிகளவிலான நகரங்கள் உள்ளன. உலக சுகாதார அறிக்கையின்படி பார்த்தால், உலக நாடுகளில் மிக மோசமான சுகாதார சீர்கேடுகளை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவை ஆறு மண்டலங்களாக பிரித்து இந்த மண்டலங்களில் உள்ள மக்கள்தொகை அடர்த்தியை அலசினால், கிழக்கு மண்டலத்தில்தான் அதிகபட்சமாக மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 625 பேராக உள்ளனர். வடகிழக்கு மண்டலத்தில் மிகவும் குறைவான மக்கள்தொகை அடர்த்தி 176 பேர் ஆகும். மத்திய மண்டலத்தில் மக்கள்தொகை அடர்த்தி 417, தெற்கு மண்டலம் 397, மேற்கு மண்டலம் 267 ஆக உள்ளது. இதன்படி கிழக்கு மண்டலத்தை சேர்ந்த பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து மக்கள்தொகை அடர்த்தி அதிகரித்து வருகிறது.

அதிக மக்கள் அடர்த்தி கொண்ட ஐந்து மாநிலங்கள் வரிசைப்படி,

* பீகார் - 1,102, 2. மேற்குவங்காளம் - 1,029, 3. கேரளா - 859, 4. உத்திரபிரதேசம் - 828, 5. ஹரியானா - 573
குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட ஐந்து மாநிலங்கள் வரிசைப்படி,

* அருணாச்சலபிரதேசம் - 17, 2. மிசோரம் - 52, 3. நாகாலாந்து - 119, 4. மணிப்பூர் - 122, 5. இமாச்சலபிரதேசம் - 123

அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மூன்று யூனியன் பிரதேசங்கள்:

* டெல்லி - 11,297, 2. சண்டிகர் - 9,252, 3. புதுச்சேரி - 2,598

குறைந்த மக்கள்தொகை அடர்த்தி கொண்ட மூன்று யூனியன் பிரதேசங்கள்

* அந்தமான் & நிகோபார் தீவுகள் - 46, 2. தாத்ரா & நாகர் ஹவேலி - 698: 3. லட்சத்தீவுகள் - 2,013

எழுத்தறிவு

ஒரு நாட்டிலுள்ள மக்கள்தொகையின் எழுத்தறிவு விகிதம் அந்த நாடு அடைந்த பொருளாதார முன்னேற்றத்தின் அறிகுறியாக கருதலாம். இந்த எழுத்தறிவு நாட்டின் சமூக முன்னேற்றத்தினை காட்டும் கண்ணாடி. எழுத்தறிவு மற்றும் கல்வி முன்னேற்றமானது பிறப்புவிகிதம், குழந்தை இறப்பு விகிதம், குடிப்பெயர்வு ஆகிய காரணங்களை பொறுத்து மாற்றமடைகிறது. அதிக எழுத்தறிவு வளர்ச்சியானது மக்களிடையே சிறந்த விழிப்புணர்வு மற்றும் மனிதவளம் வளர்ச்சியடைகின்றது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த எழுத்தறிவு பெற்றவர்கள் 778,454,120 பேர் ஆகும். எழுத்தறிவு பெறாதவர்கள் 272,950,015 பேர். எழுத்தறிவு பெற்றவர்கள் 74 சதவிகிதமாகும். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்திய அளவில் எழுத்தறிவு விகிதம் 65.38 சதவிகிதமாகும். ஆக கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் எழுத்தறிவு வீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆண்- பெண் எழுத்தறிவு விகிதமும் அதிகரித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு பெறாதவர்கள் 26 சதவிகிதம் பேர் ஆவர். இது 2001 மக்கள் தொகையில் 35 சதவிகிதமாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் எழுத்தறிவு விகிதம் உயர்ந்துள்ளதை இது காட்டுகிறது. தென் மாநிலங்கள் பத்தாண்டுகளாக பெருமளவு எழுத்தறிவில் உயர்ந்துள்ளது. இவைகளுடன் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார், அருணாச்சல பிரதேசம், உத்திரபிரதேச மாநிலங்கள் பத்தாண்டுகளாக எழுத்தறிவு வளர்ச்சியில் முன்னேற்றம் போதவில்லை.

எந்த மொழியானது படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் ஆவர். படிக்க மட்டுமே தெரிந்து எழுத தெரியவில்லையெனில் அவர் எழுத்தறிவற்றவராக கருதபடுவார். அதேபோல ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் எழுத்தறிவற்றவர்களாவர். 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு முதல் 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் எழுத்தறிவு இல்லாதவர்களாகவே கருதப்பட்டு வருகின்றது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 1,210,193,422 ஆகும். இதில் 7 வயது மற்றும் 7 வயதிற்கும் அதிகமானோர் 1,05,404,135 பேர். இதன்படி 778,454,120 பேர் எழுத்தறிவு பெற்றவர்கள் ஆவர். 272, 950,015 எழுத்தறிவு பெறாதவர்கள் ஆவர். இதற்கிடையில் 2015 ஆம் ஆண்டுக்குள் உலகளவிலான ஆரம்பநிலை கல்வியறிவை பெற வேண்டும் என்பது தமது நூற்றாண்டு நோக்கமாகும் என ஐ.நா.சபை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிக எழுத்தறிவு கொண்ட ஐந்து மாநிலங்கள் வரிசைப்படி,

* உத்திரபிரதேசம் - 118,423,805, 2. மகாராஷ்டிரா - 82,512,225, 3. மேற்கு வங்காளம் - 62,614,556, 4. பீகார் - 54,390,254, 5. தமிழ்நாடு - 52,413,116 ஆகும்.

இந்தியாவில் குறைந்த எழுத்தறிவு கொண்ட ஐந்து மாநிலங்கள் வரிசைப்படி,

* சிக்கிம் - 449,294, 2. அருணாச்சலபிரதேசம் - 789,943, 3. மிசோரம் - 847,592, 4. கோவா - 1,152,117, நாகாலாந்து - 1,357,579.

அதிக எழுத்தறிவு கொண்ட மூன்று யூனியன் பிரதேசங்கள் வரிசைப்படி,

* டெல்லி - 12,763,352, 2. புதுச்சேரி - 966,600, 3. சண்டிகர் - 809,653 ஆகும்.

குறைந்த எழுத்தறிவு கொண்ட மூன்று யூனியன் பிரதேசங்கள் :

* லட்சத்தீவுகள் - 52,914, 2. டாமன் & டையூ - 1,88,974, 3. தாத்ரா & நாகர் ஹவேலி - 2,28,028 ஆவர்.

தமிழக மக்கள்தொகை கணக்கெடுப்பு

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 படி "தமிழகத்தின் மொத்த மக்கள்தொகை 72138958 பேர் ஆவர். இது 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பில் 62405679 ஆக இருந்தது. 2011 இந்திய மக்கள்தொகையில் தமிழக மக்கள்தொகை 5.96 சதவீதம் . இந்தியாவில் மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 7-வது இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது தமிழ்நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை 97 லட்சம் அதிகரித்துள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் இருந்தனர். ஆனால் 2011-ஆம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 995 பெண்கள் உள்ளனர். இது தேசிய பாலின விகிதத்தைவிட அதிகம். என்றாலும் அண்டை மாநிலமான கேரளாவைவிட மிக குறைவாகும்.

2001-ஆம் ஆண்டில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என்று இருந்தது. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 946 பெண் குழந்தைகள் என்று அதிகரித்து இருக்கிறது. இரண்டு சதவீதம் அதிகம் என்றாலும் ஏறக்குறைய பெண் குழந்தைகள் வளர்ச்சியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 72 லட்சத்து 35 ஆயிரத்து 160 பேர் இருந்தனர். அதாவது 11.59 சதவீதமாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பின்படி 68 லட்சத்து 94 ஆயிரத்து 821 குழந்தைகள் தான் இருக்கின்றனர். அதாவது 11.59 சதவீதத்தில் இருந்து 9. 56 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் தமிழ்நாட்டைத்தவிர மற்ற அனைத்து மாநிலங்களின் மக்கள்தொகை சராசரி வருட வளர்ச்சி வீதம் உயர்ந்துள்ளது இந்த கணக்கெடுப்பில் தெரியவருகிறது. 2001 -11 பத்தாண்டுகளில் தமிழகத்தில் பெருமளவில் குடிபெயர்வு நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட ஐந்து மாவட்டங்கள் வரிசைப்படி,

* சென்னை - 4,681,087, 2. காஞ்சிபுரம் - 3,990,897, வேலூர் - 3,928,106, 4. கோயம்புத்தூர் - 3,472,578, 5. விழுப்புரம் - 3,463,284

தமிழ்நாட்டில் குறைந்த மக்கள்தொகை கொண்ட ஐந்து மாவட்டங்கள்:

* பெரம்பலூர் - 564,511, 2. அரியலூர் - 752,481, 3. நீலகிரி - 735,071, 4. கரூர் - 1,076,588, 5. தேனி - 1,243,684

தமிழ்நாட்டில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட ஐந்து மாவட்டங்கள்:

* சென்னை - 26,903, 2. கன்னியாகுமரி - 1,106, 3. திருவள்ளூர் - 1,049, 4. காஞ்சிபுரம் - 927, 5. மதுரை - 823

தமிழ்நாட்டில் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட ஐந்து மாவட்டங்கள்

* நீலகிரி - 288, 2. ராமநாதபுரம் - 320, 3. பெரம்பலூர் - 323, 4. சிவகங்கை - 324, 5. தர்மபுரி - 332

தமிழ்நாட்டில் அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட ஐந்து மாவட்டங்கள்

* கன்னியாகுமரி - 93.9, 2. சென்னை - 93.5, 3. நீலகிரி - 92.2, 4. தூத்துக்குடி - 91.4, 5. நாகப்பட்டினம் - 90.4

தமிழ்நாட்டில் குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட ஐந்து மாவட்டங்கள்

* தர்மபுரி - 69.2, 2. கிருஷ்ணகிரி - 79.7, 3. விழுப்புரம் - 80.6, 4. சேலம் - 80.7, 5. ஈரோடு - 80.8

தமிழ்நாட்டில் அதிக பாலின விகிதம் (1000 ஆண்களுக்கு பெண்கள்) கொண்ட ஐந்து மாவட்டங்கள்

* நீலகிரி - 1041, 2. தஞ்சாவூர் - 1031, 3. நாகப்பட்டினம் - 1025, 4. திருநெல்வேலி - 1024, 5. திருவாரூர் - 1021

தமிழ்நாட்டில் குறைந்த பாலின விகிதம் (1000 ஆண்களுக்கு பெண்கள்) கொண்ட ஐந்து மாவட்டங்கள்

1. தர்மபுரி - 946, 2. சேலம் - 954, 3. கிருஷ்ணகிரி - 956, 4. ராமநாதபுரம் - 977, 5. திருவள்ளூர் - 983 ஆகும்.

முடிவுரை:-

மக்கள்தொகை கணக்கெடுப்பின் தற்காலிக அறிக்கையின்படி, மொத்த மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. என்றாலும் மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது குறைந்து வருகிறது. இந்த அதிகரிக்கும் இந்திய மக்கள்தொகை சில ஆண்டுகளில் சீனாவை மீறி சென்றுவிடும்.

1990களில் வட மாநிலங்களில் நிலவிய பிறப்பு வீதம் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் குறைந்துள்ளது. இது இன்னும் குறைய வரும். இது ஒரு நல் அறிகுறியாகும். அதே சமயத்தில் தென் மாநிலங்கள் பிறப்புவீதம் பெருமளவில் குறைந்து வருகின்றது.

தென் மாநிலங்களைவிட மக்கள்தொகை, மக்கள் நெருக்கம், வடமாநிலங்களில் அதிகமாக உள்ளதால் அரசியல், பொருளாதாரம் மையங்கள் வடமாநிலங்களிலேயே காணப்படுகின்றது. இதனால் வடக்கு தெற்கு மாநிலங்களுக்கிடையே பெருமளவில் இடைவெளி அதிகரித்துள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில், பாலின விகிதம் சற்று உயர்ந்துள்ளது. என்றாலும் வடமாநிலங்களில் இன்னும் பாலினி விகிதம் இன்றும் குறைவாகவே காணப்படுகிறது. நவீன மருத்துவ கருவிகள் மூலம் பெண் குழந்தைகளை புறக்கணித்தும், பெண் சிசு கொலையும் இன்னும் குறையவில்லை என்பதை இந்த கணக்கெடுப்பு காட்டுகிறது.

இந்தியர்கள் பலர் இன்னும் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளையே பெறவேண்டும் என்று பலமாக விரும்புவது கவலைக்குரிய செய்தியாகவே இருக்கிறது. இந்த போக்கு நாடெங்கிலும் ஏறக்குறைய இருக்கிறது. பெண் கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை போன்றவைகளுக்கு எதிராக இயக்கங்கள் நடத்தியும், கர்பத்தில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா என்பதை அறிந்துக் கொள்ள நடத்தப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்றவைகளை சட்டவிரோதமாக்கியும் கூட இந்த போக்கு நீடிக்கிறது.
nakkeeran

No comments:

Post a Comment