வருடம் தோறும் உணவு உற்பத்தியில் 1.3 பில்லியன் டன் உணவு பொருட்கள் வீணாவதாக ஐ.நா.,வீன் உணவு மற்றும் விவசாய அமைப்பு(FAO) கூறியுள்ளது.தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்த அளவே கிடைத்து வரும் இயற்கை வளங்களே உள்ளதால், உணவு வீணாவதை குறைக்க வேண்டும்.
மக்களுக்கு உணவு வழங்க உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளது.உலகின் உணவு உற்பத்தியில் பாதியளவு உணவு பொருட்கள் வீணாகி வருவதாகவும் கூறியுள்ளது.தற்போது உலகில்925 மில்லியன் மக்கள் பசியால் அவதிப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த அறிக்கையில், வளரும் நாடுகளில் போதிய உள்கட்டமைப்பு இல்லாதது மற்றும் விவசாய பாதிப்பு போன்ற காரணங்களினால் உணவு வீணாவது முக்கிய பிரச்னையாக உள்ளது.ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் நுகர்வோர்கள் வருடம் தோறும் 95 முதல் 115 கிலோ கிராம் உணவு பொருட்கள் வீணாகி வருகின்றன.
No comments:
Post a Comment