islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மேற்கு வங்காள சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


மேற்கு வங்காள மாநில சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 59 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றி சதவீதம் 20 ஆகும். ஆனால், மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம் மக்கள் தொகையை விட இது குறைவாகும்.


கடந்த சட்டப் பேரவையில் 46 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் இடம் பெற்றிருந்தனர். அவ்வகையில் தற்போதைய சட்டப் பேரவையில் முஸ்லிம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனலாம். மாநிலத்தின் மொத்த எம்.எல்.ஏக்கள் 294 பேர். இவர்களில் 59 பேர் முஸ்லிம்கள். வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களில் 7 பேர் முஸ்லிம் பெண்களாவர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 2 முஸ்லிம் பெண்கள் தாம் எம்.எல்.ஏக்களாக பதவி வகித்தனர்.

திரிணாமுல்-காங்கிரஸ் கூட்டணியில் 40 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள்

திரிணாமுல்-காங்கிரஸ் கட்சி கூட்டணியில் 40 பேர் முஸ்லிம் எம்.எல்.ஏக்களாவர். திரிணாமுல் காங்கிரஸை சார்ந்த 25 பேரும், காங்கிரஸ் கட்சியை சார்ந்த 15 பேரும் சட்டப்பேரவைக்கு செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் புதுமுகங்களாவர். ஹவ்ரா மாவட்டத்தில் உலுபெரியா பர்பா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவர் ஐ.பி.எஸ் அதிகாரியும் பிரபலமான ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரியுமான ஹைதர் அஸீஸ் ஸஃப்வி ஆவார்.

ஓய்வுப்பெற்ற கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி நூரே ஆலம் சவுதரியும் வெற்றிப்பெற்றவர்களில் அடங்குவார். இவர் பிர்பம் மாவட்டத்தில் முராராய் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தொழிலதிபர் அசோக் டோடியின் மகளை காதலித்து திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்ட கம்ப்யூட்டர் டிசைனர் ரிஸ்வானுர் ரஹ்மானின் சகோதரர் ருக்பானுர் ரஹ்மானை மம்தா இத்தேர்தலில் களமிறக்கினார். அவரும் வெற்றிப்பெற்றுள்ளார். ரிஸ்வானுர் ரஹ்மானின் கொலையை முக்கியப் பிரச்சனையாக தேர்தல் பிரச்சாரத்தில் எடுத்து வைத்தார் மம்தா என்பது குறிப்பிடத்தக்கது.

நந்திக்கிராமில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரோஷா பீவி. இவருடைய மகன் நந்திக்கிராமில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் போலீஸ் படை நடத்திய வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலிலும் திரிணாமுல் சார்பாக போட்டியிட்ட பிரோஷா பீவி மீண்டும் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துள்ளார்.

முர்ஷிதா பாத் மாவட்டத்திலிருந்து 15 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தலில் படு தோல்விடைந்த ஆளும் இடது சாரிக்கூட்டணியில் இம்முறை 18 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு செல்லவுள்ளனர். அவர்களில் 13 பேர் சி.பி.எம் கட்சியை சார்ந்தவர்கள். AIFB-2, RSP-2, SP-1 ஆகியோரும் அடங்குவர். முந்தைய அரசில் அமைச்சர்களாக பதவி வகித்த பல முஸ்லிம்களும் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர்.
thoothu

No comments:

Post a Comment