கவுரவ கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை வழங்க வேண்டும் என்று நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கவுரவ கொலைகள் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல; தேசத்திற்கு அவமானமும் கூட. இந்த பழக்கம் முற்றிலும் விரட்டியடிக்கப்பட வேண்டும்.
என்ன காரணத்திற்காக கவுரவக் கொலைகள் செய்யபப்ட்டாலும்,அக்கொலையை செய்பவர்களின் வழக்கை அரிதிலும் அரிதாக கருதி, அத்தகைய குற்றவாளிகளுக்கு அனைத்து நீதிமன்றங்களும் மரணத்தண்டனை வழங்க வேண்டும் என்று கவுரவக் கொலை தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோரடங்கிய அமர்வு, இன்று வழங்கிய தீர்ப்பில் தெரிவித்தது.
இதுபோன்ற அநாகரிகமான நடத்தைகளை தடுத்து நிறுத்துவது மிகவும் அவசியமானது. கவுரவக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கும் அனைவரும், தங்களுக்கு மரணத்தண்டனை காத்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் தங்கள் தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment