islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழகத்தில் இந்த ஆண்டு பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு கடும் போட்டி!!!

பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் கடும் போட்டி:




தமிழகத்தில் இந்த ஆண்டு பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது.  பிளஸ் 2 தேர்வு முடிவில் பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய முக்கியப் பாடங்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 மதிப்பெண்ணை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாக 120 மாணவர்கள் பெற்றுள்ளனர். பி.இ. படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பொருத்தவரை, 200-ல் தொடங்கி, ஒவ்வொரு கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் இடையே 1,000 மாணவர்களுக்கு மேல் உள்ளனர். அதாவது, 200-க்கும் 199 கட்-ஆஃப் மதிப்பெண் வாங்கியுள்ள மாணவர்களைக் காட்டிலும் அதிகமாக 1,174 மாணவர்கள் கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர்; கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 199-ஐக் காட்டிலும் இந்த ஆண்டு ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 565 அதிகம்.  ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 198-ஐ இந்த ஆண்டு 2,717 மாணவர்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 1,000-த்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆண்டு பி.இ. படிப்புக்கு உரிய ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 198-ஐப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  சிறந்த கல்லூரிகளில்... பி.இ. படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளதால், அண்ணா பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரி உள்பட சிறந்த கல்லூரிகளில் மிக அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களுக்கே விரும்பிய பொறியியல் படிப்புப் பிரிவு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.



பி.இ.: 120 பேர்; எம்.பி.பி.எஸ்.: 65 பேர்:
தமிழகத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களிடையே பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது.  பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய முக்கியப் பாடங்களாகிய கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மிக அதிகமான மாணவர்கள் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் (கட்-ஆஃப்) 200-க்கு 200-ஐப் பெற்றுள்ளனர்.  பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 120 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்; இதே போன்று எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 65 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டைக் காட்டிலும்...: பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய மூன்று முக்கியப் பாடங்களில் கடந்த கல்வி ஆண்டில் (2010-11) மொத்தம் 31 பேர் மட்டுமே 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.  எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய மூன்று முக்கியப் பாடங்களில் கடந்த கல்வி ஆண்டில் (2010-11) மொத்தம் 14 மாணவர்கள் மட்டுமே 200-க்கு 200 பெற்றனர்; இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையும் 4 மடங்குக்கு மேல், அதாவது 65 மாணவர்கள் 200-க்கு 200 பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டு கணிதத்தில் 200-க்கு 200 பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 1762; இந்த ஆண்டு கணிதத்தில் 2720 மாணவர்கள் 200-க்கு 200 வாங்கியுள்ளனர். இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 646 மாணவர்களும் (கடந்த ஆண்டு 231 பேர்), வேதியியல் பாடத்தில் 1,243 மாணவர்களும் (கடந்த ஆண்டு 741 பேர்), உயிரியல் பாடத்தில் 615 மாணவர்களும் (கடந்த ஆண்டு 258 பேர்) 200-க்கு 200 பெற்றுள்ளனர்.  எனவே, கடந்த கல்வி ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் 200-க்கு 200 பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண்ணுக்கு (கட்-ஆஃப்) கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்.: பொதுப் பிரிவு கட்-ஆஃப் 199.25:

தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு மாணவர்கள் சேருவதற்கான பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருச்சி, மதுரை, சேலம் உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு போக மொத்தம் 1,653 இடங்கள் உள்ளன. இதில் அனைத்துப் பிரிவினரும் (ஓ.சி.) போட்டி போடக்கூடிய பொதுப் பிரிவு இடங்கள் 512. இந்த கணக்கீட்டு அடிப்படையில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆக இருக்கும்.  கடும் கட்-ஆஃப் போட்டி ஏன்? எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய முக்கியப் பாடங்கள் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்றிலும் 65 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று, ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 வாங்கியுள்ளனர்; ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 199.75-ஐ 71 பேரும், 199.50-ஐ 114 பேரும், 199.25-ஐ 121 பேரும் வாங்கியுள்ளனர். இதில் கட்-ஆஃப் மதிப்பெண் 199.75-க்கு மேல் 65 பேர், 199.50-க்கு மேல் 136 பேர், 199.25-க்கு மேல் 250 பேர் உள்ளனர். ஆக, எம்.பி.பி.எஸ். படிப்பில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி 199.25 மதிப்பெண்ணுக்குள் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளதால் கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது.  பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கட்-ஆஃப் என்ன? எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சேருவதற்கே மாணவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். முதல் நாள் கலந்தாய்வு நடக்கும்போதே இந்த மூன்று கல்லூரிகளிலும் மொத்தம் உள்ள 352 எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பி விடும்.  எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து விண்ணப்பிக்கும் மாணவர்களில், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களைக் காட்டிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால், அனைத்துப் பிரிவினருக்கு உரிய இடங்களிலேயே பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விதிப்படி இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் அனைத்துப் பிரிவினருக்கு உரிய 512 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்பட மொத்தம் 950 எம்.பி.பி.எஸ். இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ளன. அதாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என தனியாக 438 ஒதுக்கீட்டு இடங்கள் (26.5 சதவீதம்) உள்ளன. எனினும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் இந்த ஆண்டு (கடந்த ஆண்டு கட்-ஆஃப் 195.5) அதிகரித்து 197.25-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மற்ற பிரிவினருக்கு... எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 196-ஆகவும் (கடந்த ஆண்டு 194), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 195.25-ஆகவும் (கடந்த ஆண்டு 193.25) தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 190.50-ஆகவும் (கடந்த ஆண்டு 188.50) தாழ்த்தப்பட்ட (அருந்ததியினர்) வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 186.75-ஆகவும் (கடந்த ஆண்டு 184.75), பழங்குடி வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 181.50-ஆகவும் (கடந்த ஆண்டு 179.50) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பி.டி.எஸ். படிப்பு: இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரித்துள்ளதால், பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு பி.டி.எஸ். படிப்பில் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பொதுப் பிரிவில் மாணவர்கள் சேருவதற்கு கட்-ஆஃப் மதிப்பெண் 193.75-ஆக இருந்தது; இந்த ஆண்டு இந்த கட்-ஆஃப் மதிப்பெண் 195.75-ஆக இருக்கும்.  மிக அதிக மதிப்பெண்: ""மாணவர்கள் மிகவும் நன்றாகப் படித்தால்தான் அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சிறந்த கல்லூரிகளில் சேர முடியும் என்பது இந்த ஆண்டு பிளஸ் 2 முடிவின் அடிப்படையிலான பி.இ.-எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண்கள் மூலம் தெளிவாகியுள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்தல், புதிய மருத்துவக் கல்லூரிகளை விரைவில் தொடங்குவதன் மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்' என்றார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
-DINAMANI

No comments:

Post a Comment