islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

எகிப்தில் மதக் கலவரம்: 190 பேர் கைது



எகிப்தில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கெய்ரோவின் இம்பாபா மாவட்டத்தில், நேற்றிரவு இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் உயிரிழந்தனர். 186 பேர் காயமடைந்தனர்.

இஸ்லாமிய இளைஞரை மணந்த பெண் ஒருவரை கிறிஸ்தவர்கள் அத்துமீறி தங்கள் கட்டுப்பாட்டில் பிடித்து வைத்துள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து, காப்டிக் செயின்ட் மேனா தேவாலயத்திற்கு அருகே நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸாரும் ராணுவத்தினரும் அங்கு விரைந்து வந்தனர். கலவரம் தொடர்பாக 190 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் எகிப்து ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.

No comments:

Post a Comment