islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

25ஆ‌ம் தே‌தி ‌பிள‌ஸ் 2 ம‌தி‌ப்பெ‌ண் சா‌ன்‌றித‌ழ்க‌ள்


பிள‌ஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் வரு‌ம் 25ஆ‌ம் தேதி அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்படும் எ‌ன்று‌ம் தனிதேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலிருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எ‌ன்று‌ம் அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தமிழ்நாடு முழுவதும் பிளஸ்2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆ‌ம் தேதி தொடங்கி 25ஆ‌ம் தேதி முடிவடைந்தது. 8 லட்சம் மாணவர்கள் எதிர்பார்க்கும் பிளஸ்2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. முடிவை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடுகிறார்.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல் அவர்கள் படித்த பள்ளியில் 9ஆ‌ம் தேதி காலை 10 மணிக்கு ஒட்டப்படும். மதிப்பெண் சான்றிதழ்கள் வரு‌ம் 25ஆ‌ம் தேதி அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் வழங்கப்படும். தனிதேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலிருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

விடைத்தாள் அச்சுபகர்ப்பு நகல்கள் மற்றும் மறுகூட்டலுக்கு 11ஆ‌ம் தேதி முதல் 16ஆ‌ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதாவது அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், சென்னையை தவிர்த்த அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். அரசு தேர்வு இயக்குனர் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படமாட்டாது.

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கலாம். மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.550 கட்டணமாகும். மற்ற பாடங்களுக்கு தலா ரூ.275 கட்டணமாகும். தேர்வு எழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டல்கோரி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்துக்கு மறுகூட்டல் கோரி தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் கிடைத்தபிறகு விரும்பினால் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

மறுகூட்டலுக்கு தமிழ், ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.305 கட்டணமும், மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205ம் கட்டணமும் ஆகும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தொகையை தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் அரசு தேர்வு இயக்குனர், சென்னை-6 என்ற பெயரில் வங்கியில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து அதை கொடுத்தால் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

விடைத்தாள் அச்சுபகர்ப்பு நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகல் பெற்ற பின்னர் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விடைத்தாள் நகல் பெற்ற 5 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுமதிப்பீடு கட்டணம் தமிழ் மற்றும் ஆங்கிலப்பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.1,010 செலுத்த வேண்டும். மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.505 கட்டணம் ஆகும். மறுகூட்டலுக்கு தமிழ், ஆங்கிலம், உயிரியல் பாடங்களுக்கு ரூ.305ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205ம் கட்டணம் ஆகும். இதற்கான அறிவுரைகள் விடைத்தாள் அச்சுபகர்ப்பு நகலுடன் இணைத்து அனுப்பப்படும் எ‌ன்று வசுந்தராதேவி கூ‌றியு‌ள்ளா‌ர்.

No comments:

Post a Comment