islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஒசாமா பின்லேடன் கொலை செய்யப்பட்டது தொடர்பில் முழு விபரங்களும் தேவை - ஐ.நா


அமெரிக்க உளவுப்படையினரின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழுமையான சகல விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவநீதம் பிள்ளை கேட்டுள்ளார்.

அல்கைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லாடனுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை சட்டப்படியான ஒன்றா என சரிபார்க்க வேண்டியுள்ளதால் அதற்கு இந்தத் தகவல்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அல் கைதா இயக்கத்தின் நிறுவனரான ஒசாமா பின் லாடன் மிக கொடுரமான பயங்கரவாதச் செயல்களைப் புரிந்துள்ள ஒருவர் என்றாலும் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.

இதேவேளை அங்கிலிகன் திருச்சபையின் தலைவரான ரோவான் வில்லியம்ஸ் பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ஆயுதமற்ற ஒருவரை நிராயுதபாணியான நிலையில் கொன்றது தனக்கு சங்கடமான உணர்வுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒசாமா பின் லாடன் தன் நாட்டிலிருந்ததை தனது உளவு நிறுவனங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனதாக கூறப்படுவது தொடர்பாக ஒரு விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளதாக மூத்த பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக் கிழமை இரவில் ஒசாமா பின் லாடன் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தி அவரை கொன்ற தாக்குதல் நடவடிக்கை குறித்து தமக்கு எவ்வித விவரமும் முன்னதாக தெரிவிக்கப்படவில்லை என்று பாகிஸ்தானிய இராணுவத் தளபதிகள் கூறியுள்ளனர்.
inneram

No comments:

Post a Comment