islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்



சீனாவின் தென்மேற்குப் பகுதியில் ஒரு விவசாயத் தம்பதியினருக்கு இரு குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளன.


சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு விவசாயத் தம்பதியினருக்கு வியாழக்கிழமையன்று இரு பெண் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளன. ஒரே உடலில் இரு தலைகளுடன் பிறந்த இந்தக் குழந்தைகளை இவர்களது பெற்றோர்கள் முதலில் ஏற்க மறுத்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர் வாங் தெரிவித்தார். இந்தக் குழந்தைகளை உயிருடன் பாதுகாப்பது சிரமம் என்று எண்ணியதாலேயே அவர்கள் இந்த முடிவுக்கு வந்ததாக வாங் தெரிவித்தார்.

மருத்துவ வல்லுனர்களின் கண்காணிப்பு தேவைப்படுவதால் அருகிலுள்ள சாங்கிங் நகர மருத்துவமனைக்கு இந்தக் குழந்தைகள் மாற்றப்பட்டுள்ளன. உடல் உள்ளுறுப்புகள் தனித்தனியே இருந்தாலும் இந்தக் குழந்தைகளைப் பிரிப்பது சாத்தியமில்லை என்று மருத்துவர்கள் கூறியதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment