islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இஸ்லாமிய விஞ்ஞானிகள்... அல் ராஸி 841-926 கி.பி.





தலைசிறந்த மருத்துவராக எல்லா காலகட்டத்திலும் பெருமைப்படுத்தப்பட்டும் இவரை மேற்கத்தியர்கள் ரேஜஸ் என்று அழைக்கின்றனர்.சின்னம்மை பெரியம்மை என்ற நோய்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை கண்டறியமுடியாமல் கிரேக்க மற்றும் இந்திய மருத்துவ மேதைகள் குழம்பிக்கொண்டிருந்த வேளையில் அவவற்றை விளக்கிக்கூறி வேறுபடுத்திக்காட்டிய மருத்துவமேதை. இவர் வேதியியல் பற்றி - கிதாப் அல் அஸ்ரா என்ற நூலையும்,உலகிலேயே முதன் முதலாக குழந்தைகள் நலம்பற்றிய நூலையும் எழுதினார். இவருடைய அல்ஹவி என்ற நூல் கலைக் களஞ்சியத்தில் இடம்பெற்ற நூலாகும்.இவர் எழுதிய மற்றும் சில நூல்கள் கிதாப் அல் மன்ஸூரி,அல்முர்ஸித்,அல்குதாரிவல்குதாரி.இவர் பாக்தாதைச் சார்ந்தவர்.