islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

'கடவுள்' இருப்பது உண்மை தான்!-


 

கடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்தப்
பிரபஞ்சம் (universe) எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை (mass) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்பதை அறிய ஜெனீவாவில் ஒரு மாபெரும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. தட்ஸ்தமிழ் வாசகர்கள் இது குறித்த எனது முந்தைய கட்டுரைகளை படித்திருப்பீர்கள்.

அதை
படிக்காதவர்கள், அல்லது மீண்டும் படிக்க விரும்புவோர் 'Higgs Boson'! கடவுளே! (/editor-speaks/2008/09/09-world-biggest-physics-experiment.html), கடவுளின் அணுத் துகளைத் தேடி...பயணம் ஆரம்பம் (/editor-speaks/2010/03/31-atom-smasher-achieves-big-bang-collisions.html) ஆகிய கட்டுரைகளை ஒருமுறை பார்த்துக் கொள்ளலாம்.

பிரான்ஸ்
-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் அமைத்துள்ள Large Hadron Collider என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் கடந்த மாதம் ஜனவரியில் இந்த சோதனை தொடங்கியது. (அதற்கு ஓராண்டுக்கு முன்பே சோதனை தொடங்கியது. ஆனால், ஆரம்பத்திலேயே அதன் குளிரூட்டு்ம் கருவிகளில் பிரச்சனை வந்ததால், அதை சரி செய்து சோதனையை ஆரம்பிக்க ஓராண்டு ஆகிவிட்டது).

கிட்டத்தட்ட
400 டிரி்ல்லியன் புரோட்டான்களை எதிரெதிர் திசையில் அதிபயங்கர வேகத்தில் மோதவிட்டு சோதனைகள் நடந்தன. அட்லஸ், சிஎம்எஸ் என இரண்டு தனித்தனி விஞ்ஞானிகள் குழுவினர் இந்த சோதனைகளை நடத்தினர்.

இருவருக்கும்
கிடைத்துள்ள ஒரே ரிசல்ட்.... 'Higgs Boson' இருக்கிறது என்பது தான்.

அது
என்ன 'ஹிக்ஸ் போஸன்'?:

ஒரு
அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத் துகள்களால் (சப்-அடாமிக் பார்ட்டிகிள்கள்) ஆனது. ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்த துணை அணுத் துகள்களின் நிறை தான். ஆனால், உண்மையில் புரோட்டானின் நிறை, இந்த துணை அணுத் துகள்களின் நிறையை விட மிக மிக அதிகமாகவே உள்ளது.

இதனால்
, புரோட்டானில் இன்னும் ஏதோ ஒரு 'வெயிட்டான' சமாச்சாரமும் உள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அது என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் உதித்த விஷயம் தான் 'ஹிக்ஸ் போஸன்'.

இதுவரை
உறுதிப்படுத்தப்படாத இந்த 'ஹிக்ஸ் போஸன்' தான், உண்மையிலேயே பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்தின் அடிப்படை என்பது கடவுள் மாதிரி என்பதால் அதற்கு 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்று பெயரிடப்பட்டது.

இதையடுத்து
இந்தத் துகளைத் தேடி பயணத்தை ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள்.

டிரில்லியன்
கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று அது சிதறும். கூடவே, 'ஹிக்ஸ் போஸன்' துகளும் புரோட்டானிலிருந்து வெளியே வரும் என்ற நம்பிக்கையில் தான் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில், Large Hadron Collider என்ற அதிநவீன கருவியை பெரும் செலவில் அமைத்தனர்.

இங்கு
அட்லஸ், சிஎம்எஸ் ஆகிய குழுக்கள் நடத்திய தனித்தனி சோதனைகளில் 'ஹிக்ஸ் போஸன்' என்ற ஒரு விஷயம் இருப்பது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது. நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும், அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இதன்
எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் (electron volts) என்றும், இது புரோட்டானை விட 250,000 மடங்கு அதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் பெரும் பாரம் 'ஹிக்ஸ் போஸன்' தான்.

இருப்பினும்
இதை மேலும் உறுதிப்படுத்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

'
ஹிக்ஸ் போஸனிடம்' ஸாரி.. கடவுளிடம் பாரத்தை போட்டு விட்டு காத்திருப்போம்..!

.கே.கான்

 

No comments:

Post a Comment