islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

''அரசியல்கோமாளி'' சுப்பிரமணியன் சுவாமிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகம் கல்தா !!!.



இந்திய அரசியலில் காவி சிந்தனை கொண்ட காமெடி பீஸான சுப்ரமணியன் சுவாமி கடந்த ஜூலை மாதம் ஆங்கிலப் பத்திரிக்கையான டி.என்.ஏ எனும் நாளிதழில் முஸ்லீம்களின் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கட்டுரை எழுதிய காரணத்துக்காக ''இந்திய அரசியல் கோமாளி'' என்றழைக்கப்படும் சுப்ரமணியன் சுவாமியின் பொருளாதாரம் குறித்த பாடங்களை நீக்குவதாக அவர் பணியாற்றும் உலக புகழ் பெற்ற பல்கலைகழகமான ஹார்வர்டு பல்கலைகழகம் அறிவித்துள்ளது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் 'ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்' என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கோடை விடுமுறை கால பள்ளியில், சம்மர் ஸ்கூலில் ‘Quantitative Methods in Economics and Business’ மற்றும் ‘Economic Development in India and East Asia’ ஆகிய தலைப்புகளில் பாடம் எடுப்பார் சாமி. 

டி.என்.ஏ எனும் நாளிதழில் தலையங்கம் எழுதிய சுவாமி,

இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் தீவிரவாதிகள் ஆக்கப்படுவதாகவும் அதற்கு பதிலடியாக காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான 370 சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்றும்,

ஆர்.எஸ்.எஸ் பட்டியலிடும் மசூதிகளை கோவில்களாக மாற்ற வேண்டும் என்றும்,

தங்கள் முன்னோர்கள் இந்துக்கள் என ஒப்புக் கொள்ளாதவர்களின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்றும்,

இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுவதைத் தடுக்க சட்டம் வகுக்க வேண்டும் என்றும்,

மும்பையில் அடுத்தடுத்து நான்கு குண்டு வெடிப்புக்ள் நடைபெற்ற சில தினங்களுக்குப் பிறகு எழுதப்பட்ட இக் கட்டுரையில் குண்டுவெடிப்புகள் தொடர்ந்தால் முஸ்லீம்களின் வழிபாட்டு இடங்களை திரும்ப தாக்கி அழிக்க வேண்டும் என்றும்,

முஸ்லீம்களுக்கு எதிராக விஷம் கக்கியிருந்தார். இவரது விஷக்கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது. நடு நிலையாளர்கள் அனைவரும் எதிர்த்தனர். இதன் காரணமாக பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆங்கிலப் பத்திரிக்கையில் தலையங்கம் எழுதியதாக சுப்பிரமணிய சாமி மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுப்பிரமணிய சாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 A படி பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் தொடர்பான வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

சுப்ரமணியன் சுவாமி ஹார்வர்டு பல்கலைகழகத்தில் 1965 ல் பொருளாதாரத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றவர் என்பதோடு அப்பல்கலைகழகத்தில் பகுதி நேர பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். அவருடனான உறவைப் பல்கலைகழகம் துண்டிக்க வேண்டும் என்று ஹார்வர்ட் பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஒரு சாரார் அவருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தினர். இதில் 400 பேர் கையொப்பம் இட்டுள்ளனர். வரும் கல்வி ஆண்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நடத்தும் பொருளாதாரம் தொடர்பான இரு பாடப் பிரிவுகளை முற்றாக நீக்குவதற்கு ஆதரவாக அறுதிப் பெறும்பான்மையான ஹாவர்ட் பல்கலைக் கழகத்தின் கலை அறிவியல் பாடப் பிரிவுப் பேராசிரியர்கள் வாக்களித்துள்ளனர்.

இந் நிலையில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்விப் பிரிவுக்கான (இதன் கீழ் தான் பொருளாதாரத்துறையும் வருகிறது) 2012ம் ஆண்டுக்கான பாடத் திட்டத்தை முடிவு செய்ய இந்த ஆசியர்களின் கூட்டம் 07-12-2011 அன்று நடந்தது.

அப்போது, இந்தப் பிரிவில் பணியாற்றும் பல்வேறு மதங்கள், இனங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் சாமியின் இஸ்லாம் பற்றிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சாமி பாடம் நடத்தவும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

மதங்கள் ஒப்பீட்டுத் துறையின் பேராசிரியரான டயானா எக் பேசுகையில், சாமி இங்கு பாடம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்ற தனது எதிர்ப்பை முதலில் கிளப்பினார். அவர் கூறுகையில், மதங்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு சுயலாபம் தேட முயல்கிறார் சாமி. மதக்கலரங்களை தூண்டிவிடும் ஒருவருடன், சிறுபான்மை மக்களுக்கு எதிரான மத துவேஷத்தை பரப்பித் திரியும் ஒருவருடன் ஹாவர்ட் போன்ற ஒரு சர்வதேச கல்வி மையம் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றார்.

அதே போல தத்துவவியல் துறை பேராசியர் சீன் கெல்லி கூறுகையில், நான் கூட முதலில் சாமியை ஆதரித்தேன். ஆனால், அவர் என்ன எழுதினார் என்பதை முழுமையாக பார்த்த பிறகு அதை ஏற்க முடியவில்லை. கருத்து சுதந்திரம் என்று கூறிக் கொண்டு இரு மதத்தினர் இடையே வன்முறையை தூண்டிவிடுவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கத்தல்ல. இது கருத்து சுதந்திரமல்ல, மதக் கலவரத்தை தூண்டிவிட தரப்படும் சுதந்திரம் என்றார்.

வரலாற்றுத்துறை பேராசிரியர் சுகதா போஸ் கூறுகையில், ஐரோப்பிய நாடுகளை வம்சாவளியாகக் கொண்ட அமெரிக்கர்கள் தான் உயர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளாத யூத இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கக் கூடாது என்பது மாதிரி இருக்கிறது சுப்பிரமணிய சாமியின் கருத்து என்றார்.

இவ்வாறு நடந்த காரசார விவாதத்துக்குப் பின் சாமிக்கு 'குட்பை' சொல்ல ஹாவர்ட் பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

உண்மையிலேயே இந்தக்கோமாளியின் நச்சுக்கருத்தால் மனம் புண்பட்டிருக்கும் முஸ்லிம்களின் மனதிற்கு ஹார்வர்டு பல்கலைகழகத்தின் இந்த முடிவு சற்று ஆறுதல் அளிக்கும். இதன் பிறகாவது இவர் தன்னுடைய காவி சிந்தனையை மாற்றிக்கொள்ள முயல வேண்டும்.

பல்கலைக் கழகத்தின் இந்த முடிவு குறித்து சுப்பிரமணியண் சுவாமி ஆச்சர்யம் வெளியிட்டுள்ளார். தனது கருத்தை கேட்காமலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக சுவாமி தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து கருத்து தெரிவித்த சுவாமி, ஹார்வர்டு பல்கலைக்கழகம் முதலில் என்னிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். அதுதான் நடைமுறை. ஆனால் அவ்வாறு அந்த பல்கலைக்கழகம் எதுவும் செய்யவில்லை என சுவாமி தெரிவித்தார்.

நான் மும்பை பத்திரிகையில் எழுதினேன். ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பாடம் கற்பித்தேன். இதை ஹார்வர்டு கவனத்தில் எடுத்துக் கொண்டது ஆபத்தான ஒன்று என சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்தியா குறித்து யாராவது அவதூறாக எழுதுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் நாளை இங்கு வந்தால் அவர்கள் அமெரிக்காவில் இந்தியா குறித்து எழுதியதற்காக இங்கே தண்டிக்க முடியுமா? ஹார்வர்டு இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த செயல் மிக ஆபத்தானது என்று சுவாமி கூறினார்

அதே நேரம் சுவாமி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பல தலைவர்கள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் இவர் செய்யும் காமெடிகளுக்காக இவருக்கு ''அரசியல் கோமாளி'' என்ற சிறப்பு பெயரும் உண்டு.

இவர் மனைவி பார்ஸி இனத்தவர் என்பதும், இவரின் இரண்டு மகள்களில் ஒருவரான சுஹாசினி ஹைதர் என்பவருடைய கணவர் முஸ்லீம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment