islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

உணவு கிடங்குகளில் வீணாகும் தானியங்கள் – அமைச்சர் தகவல்



மத்திய அரசின் இந்திய உணவு கார்ப்பரேஷனுக்கு சொந்தமான கிட்டங்கிகளில் சுமார் ஒரு லட்சம் டன் உணவுத் தானியங்கள் சேதமடைந்துள்ளதாக மத்திய உணவுத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) கே.வி. தாமஸ் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை அவர் தெரிவத்துள்ளதாவது:


இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி, இந்திய உணவு கார்ப்பரேஷனின் கிட்டங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 87 ஆயிரம் டன் உணவுத் தானியங்கள் சேதமடைந்துள்ளன.


2010-11 ஆண்டில் ஒரு லட்சத்து 56 டன் தானியங்களும், 2009-10 ஆண்டில் ஒரு லட்சத்து 31 ஆயிரம் டன் தானியங்களும், 2008-09 ஆண்டில் 58 ஆயிரம் டன் தானியங்களும் சேதமடைந்தன.


அதிக ஈரப்பதம், தானியங்களை தொழிலாளர்களின் முறையாக கையாளாமல் இருந்தது, நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக நாள்கள் சேமித்து வைத்திருந்தது, பறவைகள், எலிகள் உள்பட பல்வேறு காரணங்களால் சேதம் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னைகளை தடுக்க தனி அமைப்பு எதுவும் இல்லை. சேதத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிக சேதம் ஏற்பட்டுள்ள கிட்டங்கிகளின் பொறுப்பாளர்களை விசாரணை நடத்தி, அவர்கள் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கிட்டங்கிகளின் சுவர்களைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பராமரிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், ஊர்க்காவல் படையினர், சிறப்பு போலீஸ் அதிகாரிகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் கே.வி. தாமஸ்.

No comments:

Post a Comment