islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஜூன் 5ல் ஜிப்மர் நுழைவுத் தேர்வு: 37,731 பேர் எழுதுகின்றனர்


ஜிப்மர் பொது நுழைவுத்தேர்வு, ஜூன் 5ல் நடக்கிறது. இத்தேர்வை, நாடு முழுவதும், 12 மையங்களில் இருந்து, 37 ஆயிரத்து, 731 பேர் எழுதுகின்றனர்.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், மொத்தம், 116 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், 98 இடங்களுக்கு, ஜிப்மர் அகில இந்திய அளவில் பொதுத் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது. மீதமுள்ள, 18 இடங்களை, மத்திய சுகாதார அமைச்சகம் நேரடியாக நிரப்புகிறது. ஜிப்மர் பொது நுழைவுத்தேர்வு, வரும் ஜூன் 5ம் தேதி காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பெங்களூரு, போபால், சண்டிகர், சென்னை, கவுகாத்தி, கோல்கட்டா, நாக்பூர், டில்லி, புதுச்சேரி, பூனே, திருவனந்தபுரம், விஜயவாடா ஆகிய, 12 மையங்களில் நடக்கிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர, 37 ஆயிரத்து, 906 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தகுதியில்லாத, 175 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 37 ஆயிரத்து, 731 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ஆண்கள்- 15,585; பெண்கள்- 22,146. ஜிப்மரில் சேர கடந்தாண்டு, 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்தாண்டு, 2,731 விண்ணப்பங்கள் கூடுதலாகும். புதுச்சேரியைத் தவிர்த்த மற்ற எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, 35 ஆயிரத்து, 945 பேரும் புதுச்சேரிக்குரிய இடங்களுக்கு, 1,786 பேரும் தேர்வு எழுதுகின்றனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு கடந்த 6ம் தேதி முதல் உடனுக்குடன் ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டு வருகிறது. ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் ஜிப்மர் இணைய தளத்தில் பதிவெண்ணை குறிப்பிட்டு ஹால் டவுண்லோடு செய்து, அத்துடன் புகைப்படம் ஒட்டி உரிய சான்றொப்பத்துடன் தேர்வெழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment