ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு மொத்தம் 47 உறுப்பினர்களுடன் இயங்கி வருகின்றது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில். இதற்கு இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்த 15 நாடுகளின் பதவிக் காலம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. அந்த இடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
மொத்தம் 189 நாடுகள் வாக்களித்ததில் இந்தோனேஷியாவுக்கு 184, பிலிப்பைன்ஸுக்கு 183, இந்தியாவுக்கு 181 மற்றும் குவைத்துக்கு 166 வாக்குகள் கிடைத்தன.
பர்கினா ஃபாஸோ, போட்ஸ்வானா, காங்கோ, பெனின், செக் குடியரசு, ருமேனியா, சிலி, கோஸ்டா ரிகா, பெரு, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகியவை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மற்ற உறுப்பு நாடுகளாகும்.
இந்த உறுப்பினர் நாடுகளின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
தற்போது நடந்து வரும் போராட்டங்களால், சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள சிரியா தனது வாய்ப்பை குவைத்துக்கு அளித்தது.
No comments:
Post a Comment