islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஜப்பான் நிலநடுக்கம்: 100 பேருடன் கப்பல் அடித்து செல்லப்பட்டது







ஜப்பானின் கிழக்கு கடற்பகுதியை ஒட்டுமொத்தமாக புரட்டிபோட்டு, பூகம்பமும் சுனாமியும் இன்று ஆடிய கோரத்தாண்டவத்தில் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல்கள் வருமாறு:

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் குறைந்தது 60 பேர் உயிரிழந்திருப்பதாக ஜப்பான் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

100 பேருடன் வந்துகொண்டிருந்த கப்பல் ஒன்று சுனாமி அலையில் அடித்து செல்லப்பட்டதக கொய்டோ என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடலோரப் பகுதி ஒன்றில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்றின் கதி என்னவானது என்று தெரியவில்லை.

நிலநடுக்கம் வடக்கு ஜப்பான் பகுதியில்தான் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நாட்டோ கான் அறிவித்துள்ளார்.

வடக்கு ஜப்பானில் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலையில் சுமார் 30 மீட்டர் உயரத்திற்கு எழும்பி விவசாய நிலங்கள், பயிர்கள், வீடுகள்,வாகனங்கள் போன்றவற்றை அடித்துச் சென்றன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து மேலும் பல நில அதிர்வுகள் தாக்கின.

No comments:

Post a Comment