ப. சங்கர்,
இயக்குனர், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி
அகில இந்திய அளவில் மத்தியத் தேர் வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் சுமார் 880 பேரை தேர்வு செய்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பல்வேறு துறைகளுக்கு அனுப்ப மத்தியத் தேர்வாணை யம் முடிவு செய்துள்ளது. அதேசமயம் இந்த ஆண்டு முதல்நிலைத் தேர்வில் ஒரு மாற்றத்தை மத்தியத் தேர்வாணையம் கொண்டு வந்துள்ளது. அதாவது 2010-ஆம் ஆண்டு வரையில் முதல்நிலைத் தேர்வில் ஒரு பொது அறிவுத் தாளும் ஒரு விருப்பப் பாடமும் இருந்தன. ஆனால் இப்போது பொது அறிவுத் தாளுடன் விருப்பப் பாடத்திற்கு பதிலாக திறனறித் தேர்வு தாள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சிலபஸின்படி படித்தால்தான் சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற முடியும். மாற்றம் செய்யப்பட்ட புதிய முதல்நிலைத் தேர்வை பற்றி பார்ப்போம்.
இரண்டு தாள்களும் கொள்குறி வினா வகையைச் (Objective Type) சேர்ந்தவை. ஒவ்வொரு தாளும் 200 மதிப்பெண்கள் கொண்டவையாக இருக்கும். பொது அறிவுத்தாள் ஏழு பகுதி களைக் கொண்டதாக இருக்கும். அதாவது, வரலாறு, புவியியல், இந்திய அரசியல் சாசனம், பொருளாதாரம், சுற்றுப்புறச் சூழல் மற்றும் நாட்டு நடப்புகள் போன்ற பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இவற்றிற்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆனால் எத்தனை கேள்விகள் கேட்கப்படும் என்பது பற்றி இதுவரை மத்திய தேர்வாணை யத்தால் வெளியிடப்படவில்லை.
இரண்டாம் தாளான திறனறித் தேர்விலும் ஏழு பகுதிகளை உள்ளடக்கியதாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது படித்தறியும் திறமை (Comprehension) தருக்கத்திறன் (Logical Reasoning), முடிவெடுக்கும் திறமை (Decision Making) அடிப்படை எண் அறிவு (Basic numeracy) அடிப்படை ஆங்கில அறிவு (Basic English) போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அதனைப் பற்றி விரிவாகக் காண்போம்.
படித்தறியும் திறமையில் ஒரு செய்தி கொடுக்கப்பட்டு அதில் இருந்து சில வினாக்கள் கேட்கப்படும். எடுத்துக்காட்டாக இந்த கேள்வியை கவனியுங்கள்.
சமகால இந்தியாவின் பொருளாதாரம் முரண்பட்ட ஒன்றாக உள்ளது. ஏனென் றால் சில பெரிய சாதனைகளையும் சில மறக்க முடியாத தோல்விகளையும் சந்தித்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு பொருளாதாரப் பின்னடைவில் இருந்து மீண்டு பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. 1950-இல் ஏழை நாடுகளின் ஒன்றாக இருந்த இந்தியா தற்போது நான்காவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந் துள்ளது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் பட்டியலில் இந்தியா உள்ளது. தற்போது இந்தியா மிகையான அறிவுசார் சொத்துகளுடனும், தகவல் தொழில்நுட்பத்துடனும் உலகில் தலை சிறந்த அறிவு சார்ந்த பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது. நாம் தற்போது பொருளாதார ரீதியாக மிக வேகமாக வளர்ந்து வரும் ஐந்து நாடுகளில் ஒன்றாக உள்ளபோதும் மனிதவளக் குறியீட்டில் கடைசி இருபது நாடுகளில் ஒன்றாக உள்ளோம். ஒரு பக்கம் நாம் பொருளாதார வளர்ச்சியையும் தொழில்நுட்ப வளர்ச்சி யையும் கொண்டாடும் அதே வேளையில் சமூக ரீதியான குறைபாடுகளையும் நாம் எதிர்நோக்குகின்றோம். அதன் காரணமாக சமகால இந்தியாவில் இரண்டு இந்தியாக்கள் உள்ளன எனக் கூறலாம்.
கேள்வி
ஏன் இந்தியப் பொருளாதாரம் முரண் பட்ட பொருளாதாரமாக உள்ளது?
A) இது குறைந்தபட்ச எழுத்தறிவுடன் தகவல் தொடர்புத் துறையில் தலை சிறந்த நாடாக விளங்குகிறது.
C) இந்தியாவில் அதிக அளவிலான விவசாய உற்பத்தி இருந்தாலும் வறுமை அதிகமாக உள்ளது.
C) இது குறைந்த அளவிலான மனித வளக் குறியீட்டுடன் மிகப் பெரிய பொருளாதார மாக உள்ளது.
D) இது அறிவியல் ரீதியான சாதனை களையும் சமூக ரீதியான முரண்பாடுகளை யும் கொண்டுள்ளது.
இந்த கேள்விக்கு மேற்கொண்ட பத்தியை படித்து அறிந்து அதற்கு ஏற்றவாறு பதில் அளிக்க வேண்டும். இதில் மேலோட்ட மாகப் பார்த்தால் நான்கு விடைகளுமே சரியாக இருப்பதுபோலத் தோன்றும். ஆனால் அதில் மிகச் சரியானவற்றை மட்டுமே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதே போல் தருக்கவியல் முடிவுப் பகுதியில் கீழ்க்காணும் வகையில் வினாக்கள் அமையும்.
கேள்வி
கீழ்க்காணும் கூற்றைக் கவனிக்கவும்:-
கூற்று: கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் கல்வித் துறை யில் மாற்றங்களைக்கொண்டுவர முடியாது.
முடிவு-I : விரைவாக கல்வியில் விரைவான சீர்திருத்தம் கொண்டு வர மாநிலங்களின் பட்டியலில் "கல்வி' இருக்க வேண்டும்.
முடிவு-II : மாநில அரசுகள் கல்வியில் விரைவான சீர்திருத்தங்களை கொண்டு வர விரும்பவில்லை.
கீழ்க்கண்டவற்றில் எது சரி?
A) கூற்றில் இருந்து முடிவு-ஒ மட்டும் ஏற்க முடியும்
B) கூற்றில் இருந்து முடிவு-ஒஒ மட்டும் ஏற்க முடியும்
C) கூற்றில் இருந்து முடிவு- ஒ மற்றும் முடிவு-ஒஒ ஆகிய இரண்டுமே ஏற்கலாம்.
D) கூற்றில் இருந்து முடிவு-ஒ-ம் முடிவு- ஒஒ-ம் ஏற்க முடியாது.
அதே போல முடிவெடுக்கும் திறனில் ஒரு சூழ்நிலையைக் கொடுத்து அதில் எவ்வாறு சாதுரியமாக நீங்கள் முடிவு எடுப்பீர்கள் என சோதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கீழ்காணும் வகையில் கேள்வியைக் கேட்கலாம்.
கேள்வி
நோய்வாய்ப்பட்ட மூதாட்டி ஒருவர் அவருடைய ஓய்வூதியத்தைப் பெறுவதற்குத் தேவையான சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால் அவருடைய மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள முடியவில்லை. மேலதிகாரியின் விதி முறைகளை அறிந்த நீங்கள் இந்தப் பிரச்சினை களை எவ்வாறு அணுகுவீர்கள்?
A) விதிமுறையின் படியே நடப்பேன்
B) மாற்றுச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்வேன்
C) எனது சொந்தப் பணத்தைக் கொடுத்து அந்த மூதாட்டிக்கு உதவி செய்வேன். அதே வேளையில் நடைமுறை விதிகளைத் தளர்த்த மாட்டேன்.
D) மூதாட்டியின் தேவையை உணர்ந்து விதிமுறையில் சில தளர்வுகளை பின் பற்றுவேன்.
இதுபோன்ற கேள்விகள் முடிவெடுக்கும் திறனைச் சோதிக்கக் கேட்கப்படும். இந்த கேள்விகளை உங்களின் முடிவெடுக்கும் திறனைச் சோதிப்பதுடன் நீங்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவரா அல்லது எவ்வாறு சாதுரியமாக முடிவெடுக்கக் கூடியவர் எனத் தெரிந்து கொள்ள கேட்கப்படுகின்றது.
ஆனால் இந்த கேள்விகளை ஆங்கிலத் திலும் இந்தியிலும் மட்டுமே கேட்கப்படும் இரண்டாம் தாளை அணுகுவதற்கு புரிந்து கொள்ளும் திறனும், கூர்ந்து உற்று நோக்கும் திறனும், வேகமாக சிறந்து முடிவெடுக்கும் திறனும் அவசியம். இவை மூன்றும் கிராமப்புற மாணவர்களிடம் இயல்பாகவே அமைந் துள்ளது அனைவரும் அறிந்ததே. கிராமப்புற மாணவர்கள் இரண்டாம் தாளைப் பொருத்த வரையில் ஆங்கிலத்தில் பிளஸ் டூ அளவிலான புலமை இருந்தாலே எளிதில் பதில் தரலாம்.
மேலும் அடிப்படை கணித அறிவுக்கும் பத்தாம் வகுப்பு அளவிலான அறிவு இருந் தாலே போதும் என மத்தியத் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அடுத்த இதழில்.... மற்ற பகுதிகளிலிருந்து எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும் என்பது பற்றியும் அதனை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை பற்றியும், காண்போம்.எமது பயிற்சி மையத்தின் விளம்பரத்தை இவ்விதழின் பின் அட்டையில் பார்க்கவும். தங்களின் கருத்துகளை enquiry@shankariasacademy.com என்ற ஈமெயிலில் தெரிவிக்கலாம்.
(தொடரும்)
pothuarivuulagam
No comments:
Post a Comment