islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஆல்கஹால் அருந்தியிருந்தால் வண்டி நகராது


வண்டியை ஓட்டுபவர் குடிபோதையில் இருந்தால் தானாக என்ஜின் மூடிக்கொள்ளும் பூட்டை அறிமுகப்படுத்த ஜேர்மனி அரசு திட்டமிட்டுள்ளது.

அதிபர் ஏங்கலா மார்க்கெல் மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் இது தொடர்பான கருத்துருவை போக்குவரத்து அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளனர். இந்தப் பரிந்துரைப்படி ஓட்டுநரின் மூச்சுக்காற்றில் ஆல்கஹால் வாடை ஏற்படும் போது என்ஜின் தானாக மூடிக்கொள்ளும். இதனால் வண்டி ஸ்டார்ட் ஆகாது.

இது குறித்து புதன்கிழமை போக்குவரத்துத் துறை அமைச்சர் பீட்டர் ராம்சரின் ஒரு பெண் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"தானாக முன் வந்து ஆல்கஹால் பூட்டு முறையை பயன்படுத்துவதில் நாங்கள் வெளிப்படையாக உள்ளோம். இந்தப் புதிய முறை குடிபோதையாளர்களுக்கு புனர் வாழ்வு அளிக்கக் கூடியதாக இருக்கும்" என்றார்.

ஆல்கஹால் பூட்டுகளை வண்டிகளில் பொருத்த கட்டாயப்படுத்துவதை அமைச்சகம் எதிர்க்கிறது. விருப்பம் உள்ளவர்கள் தானாக முன்வந்து தங்கள் வாகனங்களில் பொருத்தி கொள்வதை வரவேற்கிறோம் என்றார்.

ஆல்கஹால் பூட்டு பொருத்தப்படுவது குறித்த சட்டம் ஏற்கனவே அமெரிக்கா, கனடா நாடுகளில் உள்ளன. ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஸ்வீடன் நாடுகள் இது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.

அடுத்த ஆண்டு முதல் ஸ்வீடனில் ஆல்கஹால் பூட்டுகள் வண்டிகளில் பொருத்த வேண்டிவரும். ஸ்டாக்ஹோம் இந்த முறையை 2008ம் ஆண்டு பரிசோதிக்க துவங்கியது. இதில் சாதகமான பலன்கள் கிடைத்துள்ளதால் ஆல்கஹால் பூட்டுகள் அமல்படுத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment