islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்தியாவில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துபவர் விபரம்: குஜராத்தில் 58 சதவீதம்



குஜராத் மாநிலத்தில் 58 சதவீத குழந்தைகள் 8ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இது தேசிய சராசரியான 55 சதவீதத்தைக் காட்டிலும் 3 சதவீதம் அதிகம்.

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகள் பற்றிய விவரங்களை ராஜ்யசபா வெளியிட்டுள்ளது. இதன்படி வளர்ச்சி பெற்ற மாநில வரிசையில் குஜராத் மாநிலம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இந்த மாநிலத்தில் 60 சதவீத பெண் குழந்தைகளும் 56 சதவீத ஆண் குழந்தைகளும் 8ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகள் விவகாரத்தில் சிக்கிம் முதல் இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 82 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்துகின்றன. இதற்கு அடுத்த படியாக பீகார் மாநிலத்தில் 81 சதவீத குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்துகின்றன.

No comments:

Post a Comment