islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

கடல் மீன்கள் உடலில் கதிர்வீச்சு பரவியது: மீன் பிடிக்கத் தடை


ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் புகுஷிமாவில் உள்ள அணு உலை பாதிக்கப்பட்டது. இந்த அணு உலையில் இருந்து கதிர்வீச்சு பரவியது.

இதனால் அந்த பகுதியில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அணு கதிர்வீச்சு கடலிலும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போது கதிர்வீச்சு கடலில் உள்ள மீன்களிடமும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மீன்களை சாப்பிட்டால் மனிதனுக்கும் கதிர்வீச்சு பாயும் அபாயம் உள்ளது. இதனால் புகுஷிமா கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடலில் வாழும் மீன்கள் ஒரே இடத்தில் இருப்பது இல்லை. ஒவ்வொரு பருவ நிலைக்கும் தகுந்த மாதிரி மீன்கள் மற்ற கடல் பகுதிகளுக்கும் செல்லும்.

புகுஷிமா கடல் பகுதிகளில் வசிக்கும் மீன்கள் மற்ற பகுதிகளுக்கு செல்லும் போது பிடிக்கப்பட்டால் அதனால் கதிர்வீச்சு அபாயம் மற்ற நாடுகளுக்கும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கடல் உணவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment