islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

குஜராத்தில் மோடிக்கு பின்னடைவு: காந்திநகர் மாநகராட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ்!


குஜராத் மாநிலத்தில் தலைநகர் காந்திநகர் பகுதியை உள்ளடக்கிய மாநகராட்சியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றிவிட்டது. இந்த வெற்றி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் பெருத்த பின்னடைவு என்று கருதப்படுகிறது.

ஏப்ரல் 19 செவ்வாய்க்கிழமை இந்த தேர்தல் நடந்தது. வியாழக்கிழமை முடிவு வெளியானது.

இந்த மாநகராட்சியின் பெரும்பகுதிதான் மூத்த தலைவர் அத்வானியின் மக்களவைத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

காந்திநகர் பகுதியை மாநில அரசு தன்னுடைய நேரடி நிர்வாகத்தில் வைத்திருந்தது. உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அடுத்தே ஆமதாபாதிலிருந்து சில வார்டுகள் பிரிக்கப்பட்டு 33 வார்டுகள் கொண்ட புதிய காந்திநகர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

இதில் காங்கிரஸ் 18 இடங்களையும் பாஜக 15 இடங்களையும் வென்றது.

"படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள் வசிக்கும் காந்திநகரில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த வெற்றி மகத்தானது. குஜராத்தில் நரேந்திர மோடியின் வீழ்ச்சிக்கு இது ஆரம்பம். 2012 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெறப்போகும் வெற்றிக்கு இது அச்சாரம்' என்று மாநில காங்கிரஸ் தலைவர் நரஹரி அமீன் உற்சாகப் பெருக்கில் அறிவித்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு குஜராத்தில் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி இது, இனி இது தொடர்கதை என்றும் அவர் அறிவித்தார்.

குஜராத்தில் காந்திநகர் தவிர 8 மாநகராட்சிகள் உள்ளன. அவற்றில் 2 காங்கிரஸ் வசமும் 6 பாஜக வசமும் உள்ளன.

No comments:

Post a Comment